[X] Close

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சவாலாக இருக்கும் சாய்னா நெவால் கருத்து


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 07:17 am
  • அ+ அ-

சென்னை

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் இருந்துவரும் நிலையில், அந்த அணி  வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து கலக்கி வருகிறார்.

2019-ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி வரும் 23-ம்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டியில் பெரும்பாலான சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் கடந்த சீசனில் இருந்து  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன் சிங், தான் சென்னை அணிக்கு வந்ததில் இருந்து தமிழில் ட்விட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தீபாவாளி, தமிழர் திருநாள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், கஜாபுயல் பாதிப்பு அனைத்தும் ஹர்பஜன் தமிழில் ட்விட் செய்து தனது வாழ்த்துக்களையும், ஆதங்கம், வருத்தங்களையும் தெரிவித்து வந்தார்.

சிஎஸ்கே அணிக்கு வந்ததில் இருந்தே தமிழில் அவ்வப்போது ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை ஹர்பஜன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த சீசனில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், போட்டி முடிந்த பின்பும் சக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஹர்பஜன் தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்வீட் செய்து மகிழ்வித்தார். சென்னைக்கு வருவதற்கு முன் " சொந்தங்களை காண வருகிறேன். ஒரு ராணுவவீரர் ஆண்டுக்கு ஒருமுறை வருவதைப்போல் வருகிறேன்" என்று ட்விட் செய்திருந்தார்.

இந்நிலையில், கேப்டன் தோனி, கேதார் ஜாதவ், முரளி விஜய் ஆகியோருடன் பாடலுக்கு நடனமாடும் காட்சியை  ஹர்பஜன் வெளியிட்டு தமிழலில் ட்விட் செய்துள்ளார். அதில், " வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல தோனி பாட்டு போட நான், முரளி விஜய், ஜாதவ் டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க.ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த சிஎஸ்கேவின் ஆட்டத்தை" என்று ட்விட்ட செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டில் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருடன் அமர்ந்து தேநீர் குடிக்கும் ஹர்பஜன் சிங் நட்பை பாராட்டும் வகையில் சினிமா பாடல் ஒன்றை ட்வீட் செய்துள்ளார். அதில்  " நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே இன்பம் வரலாம் துன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம் சென்னைஐபிஎல் நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே. செம பீலிங் வித் மச்சான் தோனி மாப்ள, ரெய்னா" எனத் தெரிவித்துள்ளார்.  

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close