[X] Close

வேகமான வளர்ச்சியை நோக்கிய பயணத்துக்கு தடைகளை உடைக்க இந்தியா தயாரா?- பெப்சி நிறுவன முன்னாள் தலைவர் இந்திரா நூயி கேள்வி


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 07:03 am
  • அ+ அ-

 

சென்னை,

12-வது ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தீவிரமான பயிற்சியில் சேப்பாக்கத்தில் ஈடுபட்டு  வருகிறது.

பயிற்சியில் கேப்டன் தோனி சிஸ்கர் அடிக்கும் ஷாட்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. அதற்கான தீவிரமான பயிற்சியில் சிஎஸ்கே அணியினர் அனைவரும் சேப்பாக்கத்தில் குழுமியுள்ளனர்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாக விளையாடிய தோனி, இழந்த பேட்டிங் ஃபார்மை மீட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 அரைசதங்கள் அடித்து தொடர் நாயகன் விருதை தோனி வென்றார். ஆனால், இந்திய அணியில் விளையாடும் தோனிக்கும், சிஎஸ்கே அணிக்கு தலைமை ஏற்று விளையாடும் தோனிக்கும் ஏராளமான வேறுபாடு உண்டு.

சிஎஸ்கே அணியின் மஞ்சள் உடை அணிந்து களத்தில் இறங்கிவிட்டால், தோனியின் அதிரடியில் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கும் என்பதில் மாற்றமில்லை. இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிஎஸ்கே அணி, 4-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் இருக்கிறது.

இதற்கான தீவிர வலைபயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனனர். இதில் நேற்று இரவு நடந்த பேட்டிங் பயிற்சியில் கேப்டன் தோனி, இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கும் ஷாட்களை அணி நிர்வாகம் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளது. தோனி வழக்கத்துக்கு மாறான உற்சாகத்துடன் இருப்பதால், இந்த முறை சிஎஸ்கே ரசிகர்களுக்கு பல இன்ப அதிர்ச்சிகளை அளிக்கலாம்.

இதற்கிடையே சிஎஸ்கே கேப்டன் தோனி, சக வீரர்கள் அனைவரும் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், அவர்ளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு செய்யமாட்டோம் என்று சிஎஸ்கே ரசிகர்களான யெல்லோ ஆர்மி(yellow Army) ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தோனியின் தீவிர ரசிகரும், உடல்முழுவதும் மஞ்சள் வண்ணம் பூசிக்கொண்டு பல்வேறு போட்டிகளில் அணியை உற்சாகப்படுத்திவரும் சரவணன் கூறுகையில், " தோனி அவரின் குடும்பத்துடன் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் சென்னையில் தங்கப்போகிறார். அவரின் உண்மையான ரசிகர்களாகிய நாங்கள் பொறுப்புடன் அவரின் தனிப்பட்ட நேரத்துக்கு மரியாதை அளிப்போம். அவர் மைதானத்துக்குவந்துவிட்டால், அவரிடம் அன்பு பாராட்டுவோம், ஆதரவு தெரிவிப்போம், ஆட்டகிராப் கேட்டு அவரை தொந்தரவு செய்யமாட்டோம் " எனத் தெரிவித்தார்

விசில் போடு குழுவின் உறுப்பினர் டி பிரவு கூறுகையில், " தோனியை காண நாங்கள் மைதானத்திலோ அல்லது ஹோட்டலிலோ  செய்யும் எந்த முயற்சியும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.அதை நாங்களும் விரும்பவில்லை, தலயும்(தோனி) விரும்பமாட்டார். இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும் என்பதுதான் விருப்பம்.

இப்போது சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிசர்ட், ரிஸ்ட் பேண்ட், உறுப்பினர் அட்டை, விசில் ஆகியவற்றை உறுப்பினர்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம், 23-ம் தேதி போட்டியின்போது மஞ்சள் வண்ணம் நிறைந்து சேப்பாக்கம் காணப்படும் " எனத் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close