[X] Close

என் கார் சேதமானதில் மகிழ்ச்சியே:  உலகக் கோப்பை நினைவு பகிரும் சச்சின் டெண்டுல்கர்


sachin-happy-dents-worldcup-memories

உலகக் கோப்பையுடன் சச்சின் | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 24 Apr, 2018 15:24 pm
  • அ+ அ-

கார் வைத்திருப்பவர்களுக்கு அதில் சிறு கீறல் ஏற்பட்டாலும் பிடிக்காது. ஆனால் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், தனது காரில் ஏற்பட்ட சேதங்கள் மகிழ்ச்சியானவை என்றும், அவை உலகக் கோப்பை வெற்றியின் நினைவுகள் என்றும் கூறியுள்ளார். 

இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சச்சின் டெண்டுல்கர். 2011 உலகக் கோப்பை வெற்றி அதுவரை 6 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியிருந்த சச்சின் டெண்டுல்கர் சந்தித்த முதல் வெற்றி. மேலும் இது பற்றி அவர் கூறுகையில்

"நாங்கள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, எனது மனைவி, அவரின் தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக, மைதானத்திலிருந்து வீட்டுக்கு சென்று விட்டார். நான் அவரை தொலைப்பேசியில் அழைத்து, 'வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ இந்த ட்ரெஸ்ஸிங் அறையில் இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்' என்று கூறி அழைத்தேன்.

ஒருவழியாக அஞ்சலி மைதானத்துக்கு வந்துவிட்டார். அவர் வரும்போது, மைதானத்துக்கு வெளியே மக்கள் நடனமாடி, கார்கள் மீது ஏறிக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து நாங்கள் கிளம்பும்போது எங்கள் காரின் மேல் பல சேதங்கள் இருந்தன. ட்ரைவரிடம் கேட்டபோது, 'நான் மேடமை இறக்கிவிட்ட பிறகு எல்லாரும் கார் மீது ஏறி குதித்து, நடனமாட ஆரம்பித்துவிட்டனர்' என்றார்.

எனவே, உலகக் கோப்பை வெற்றியின் அற்புதமான தருணத்தை காரில் ஏற்பட்ட சேதங்கள் எப்போதும் எனக்கு நினைவுபடுத்தும் என்று சொன்னேன். அதனால் என் காரில் அன்று ஏற்பட்டது மகிழ்ச்சியான சேதங்களே" என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

போரியா மஜும்தார் என்பவர் எழுதியுள்ள லெவென் காட்ஸ் அண்ட் எ பில்லியன் இண்டியன்ஸ் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட போது சச்சின் இந்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

- பிடிஐ

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close