[X] Close

ஐபிஎல் 2019: கலக்க வர்ராரு கப்பார்: பாண்டிங், கங்குலி ஆலோசனையில் மிரட்டும் டெல்லி கேபிடல்ஸ் 


delhi-capitals-team-matches-and-statistics

  • போத்திராஜ்
  • Posted: 16 Mar, 2019 15:59 pm
  • அ+ அ-

 

புது பெயர், புதிய முகங்கள், புதிய ஆலோகர், புதிய உடை என டெல்லி கேபிடல்ஸ் அணி 2019-ம் ஆண்டு 12-வது ஐபிஎல் போட்டியை எதிர்கொள்கிறது.

இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி என்று அழைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் என்ற பெயரில் புதிய சீருடையில் விளையாட வருகிறது.

இதுவரை கடந்த 11 ஐபிஎல் தொடர்களில் முதல் இரு தொடர்களில் மட்டுமே அரையிறுதிவரை டெல்லி கேபிடல்ஸ் அணி முன்னேறியது. அதன்பின் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நிலை பரிதாபம்.

முதல் இரு சீசன்களில் அரையிறுதிவரை செல்வதற்கு முக்கியக் காரணம் அந்த இரு சீசன்களிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி, வீரேந்திர சேவாக் தலைமையில் விளையாடியது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். சேவாக்கின் அதிரடி, கம்பீரின் காட்டடி ஆகியவற்றுக்காக ரசிகர்கள் திரண்டனர்.

ஆனால், அடுத்து நடந்த 9 சீஸனிலும் கடைசி இடம் அல்லது அதற்கு முந்தைய இடத்தில்தான் டெல்லி அணி நிற்கும். ஆனாலும், டெல்லி ரசிகர்கள் மத்தியில் இந்த அணிக்கு ஈர்ப்பு குறையவில்லை. டெல்லி அணி விளையாடும் போட்டி என்றால், டிக்கெட் கிடைப்பது கடினமாக இருக்கும். இதுவரை 11 சீசன்களில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அமி ஒருமுறைகூட அரையிறுதியை தாண்டியது இல்லை.

ஆனால், இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி  நிர்வாகம் ஜிஎம்ஆர் குழுமத்திடம் சென்றதால், 2019 ஐபிஎல் ஏலத்தில் ஏராளமான வீரர்களை விடுவித்து, ஆல்ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களை விலைக்கு வாங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களைப் பார்க்கும் போது மற்ற அணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில்தான் இருக்கிறார்கள்.

 

பேட்ஸ்மேன்

விக்கெட் கீப்பர்

ஆல்-ரவுண்டர்

பந்துவீ்ச்சாளர்கள்

ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்)

ரிஷப் பந்த்

அக்ஸர் படேல்

காகிசோ ரபாடா(வே)

ஷிகர் தவண்

அங்குஷ் பெயின்ஸ்

ஜலாஜ் சக்சேனா

டிரன்ட் போல்ட்(வே)

மன்ஜோத் கல்ரா

 

கிறிஸ் மோரிஸ்

இசாந்த் சர்மா(வே)

ஹனுமா விஹாரி

 

ஜெயந்த் யாதவ்

ராகுல் திவேஷியா

பிரித்வி ஷா

 

கீமோ பால்

சந்தீப் லாமிசானே

கோலின் முன்ரோ

 

ரூதர்போர்ட்

ஆவேஷ் கான்(வே)

கோலின் இன்கிராம்

 

 

ஹர்ஷல் படேல்(வே)

பண்டாரு அய்யப்பா(வே)

அமித் மிஸ்ரா

நத்து சிங்(வே)

 

இதில் குறிப்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் தங்களிடம் இருந்த விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷாபாஸ் நதீம் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தி கப்பார் ஷிகர் தவணை வாங்கியுள்ளது.

இதேபோல கோலின் இங்ராம்(தெ.ஆப்ரிக்கா), அக்ஸர் படேல், ஹனுமா விஹாரி, ரூதர்போர்ட், இசாந்த் சர்மா, கீமோ பால், ஜலாஜ் சக்சேனா, அங்குஷ் பெய்ன்ஸ், நது சிங், பண்டாரு அய்யப்பா ஆகியோர் புதிதாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பந்த், பிரித்வி ஷா, அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், ஹர்ஸல் படேல், ராகுல் திவேஷியா, ஜெயந்த் யாதவ், மன்ஜோத் கல்ரா, கோலின் முன்ரோ, டிரன்ட் போல்ட், கிறிஸ் மோரிஸ், ரபாடா, சந்தீப் லாமிசானே ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.

சிறந்த தொடக்க ஆட்டக்காரர், அதிரடி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் ஷிகர் தவண் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கிடைத்துள்ளது அசுரபலமாகும். ஷிகர் தவணின் சர்வேதச போட்டிகள் அனுபவம் அணிக்கு உதவும்.

ஷிகர் தவணுடன் ஆட்டத்தைத் தொடங்க இளம் வீரர் பிரித்வி ஷா தயார் படுத்தப்பட்டுள்ளார். ஆதலால், இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்கக் கூட்டணியை பட்டையை கிளப்ப காத்திருக்கிறது. எதிரணியினர் சற்று உஷாராக பந்துவீசுவது அவசியம். இவர்கள் இருவரையும் தவிர்த்து தொடக்க கூட்டணிக்கு கோலின் முன்ரோ, அங்குஸ் பெயின்ஸ் கூட்டணி பேக்அப்பாக இருக்கிறார்கள்.

நடுவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், கோலின் இங்ராம், ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி, மன்ஜோத் கல்ரா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். இதில் ஹனுமா விஹாரி, கல்ராவையும் மாற்று வீரர்களாக களமிறக்கினால்கூட வலுவான நடுவரிசையைப் பெற முடியும்.

ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரை, பேட்டிங் ஆல்ரவுண்டர்களில் மே.இ.தீவுகள் வீரர் ரூதர்போர்ட், பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களில் அக்ஸர் படேல், கிறிஸ் மோரிஸ் ஆகிய 3 பேரில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இவர்கள் தவிர்த்து கீமோ பால், ஜெயந்த் யாதவ், ஜலாஜ் சக்சேனாவும் இருக்கின்றனர்.

ஆனால், முக்கிய வேகப்பந்துவீ்ச்சாளர்கள் முகமது ஷமி, மேக்ஸ்வெல் ஆகியோரை ஏலத்தில் ஏன் டெல்லி கேபிடல்ஸ் அணி விலக்கியது எனத் தெரியவில்லை. ஆனால், புதுரத்தம் பாய்ச்சியதைப் போல் இளம் வீரர்களை அதிகம் கொண்டதாக இருக்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் பயிற்சியாளராக ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் செயல்படுகிறார். ஆனால், லீக் சுற்றை அணி தாண்டமுடியவில்லை. ஆனால், இந்த முறை “வங்கப்புலி, தாதா” சவுரவ் கங்குலி அணிக்கு ஆலோசகராகச் சென்றுள்ளது அந்த அணிக்கு மேலும் வலு சேர்்க்கும். அணியின் செயல்பாட்டில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.

கடந்த சீசனில் கம்பீர் தலைமையில் அணி சிறப்பாகச் செயல்படாதைத் தொடர்ந்து, கேப்டன் பொறுப்பை ஸ்ேரயாஸ் அய்யர் ஏற்று அணியை சிறப்பாக வழிநடத்தினார். ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் சிஎஸ்கே அணியை கடைசி லீக்கில் வென்று அதிர்ச்சி அளித்தது டெல்லி ேகபிடல்ஸ் அணி. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமைப் பொறுப்பும் ஏற்று, அதிக ரன்களையும் குவித்தார். ஆதலால், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்த முறையும் டெல்லி அணி சிறப்பாகச் செயல்படும் என நம்பலாம்.

நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ அருமையான ஃபார்மில் இருக்கிறார், இந்த சீசனில் நிச்சயம் ஆரஞ்சு தொப்பியை வெல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க பவுன்ஸர் மன்னன் காகிசோ ரபாடா, இசாந்த் சர்மா, நியூசி வீரர் டிரன்ட் போல்ட், ஆவேஷ் கான், மே.இ.தீவுகள் வீரர் ஷெர்பானே ரூதர்போர்ட், கீமோ பால், பண்டாரப்பா, ஹர்சல் படேல் என வேகப்பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பட்டாளமே இருக்கிறது. ஆதலால் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இந்தமுறை சிறந்த, துல்லியமான,நெருக்கடி அளிக்கும் வேகப்பந்துவீச்சை எதிரணியினர் எதிர்நோக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

அதோபோல சுழற்பந்துவீச்சில் அக்சர் படேல், சந்தீப் லாமிசானே, அமித் மிஸ்ரா, ராகுல் திவேஷியா ஆகியோர் இருப்பதும் பலமாகும்.கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை டெல்லி அணியில் அதிக ரன் அடித்த, விக்கெட் எடுத்த வீரர்கள் குறித்த விவரம் வருமாறு:

 

ஆண்டு

கேப்டன்

பேட்ஸ்மேன்

பந்துவீச்சாளர்

வெற்றி சதவீதம்

2008

சேவாக்

கம்பீர்(534ரன்)

யோ மகேஷ்(16விக்)

50

2009

கம்பீர்

டிவில்லியர்ஸ்(465)

ஏ.நெஹ்ரா(19)

71

2010

தினேஷ் கார்த்திக்

சேவாக்(356)

ஏ.மிஸ்ரா(17)

50

2011

ஜேம்ஸ் ஹோப்ஸ்

சேவாக்(424)

மோர்கல்(13)

28

2012

ஜெயவர்தனா

சேவாக்(495)

எம்.மோர்கல்(25)

68

2013

ராஸ் டெய்லர்

வார்னர்(410)

உமேஷ்(16)

18

2014

டேவிட் வார்னர்

டுமினி(410)

இம்ரான் தாஹிர்(9)

14

2015

கெவின் பீட்டர்ஸன்

டுமினி(414)

தாஹிர்(15)

35

2016

டுமினி

டீ காக்(454)

மோரிஸ்(13)

50

2017

ஜாகீர்கான்

சஞ்சு சாம்ஸன்(386)

கம்மின்ஸ்(15)

42

2018

ஸ்ரேயாஸ் அய்யர்

ரிஷப்பந்த்(684)

டி.போல்ட்(18)

35

 

ஒட்டுமொத்தத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் திறமையான வீரர்கள் இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கிடைத்துள்ளனர். இவர்களோடு ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி, கங்குலி அனுபவ ஆலோசனைகள் நிச்சயம் ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

வரும் 24-ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. 26-ம் தேதி டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close