[X] Close

சொந்தங்களைப் பார்க்க வருகிறேன்: வருகிறார் ஹர்பஜன்


ms-dhoni-harbhajan-singh-join-chennai-super-kings-camp-ahead-of-ipl-2019

  • போத்திராஜ்
  • Posted: 16 Mar, 2019 14:45 pm
  • அ+ அ-

 

சென்னை,

12-வது ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங், வழக்கம் போல் தமிழலில் ட்விட் செய்துள்ளார்.

2019-ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி வரும் 23-ம்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டியில் பெரும்பாலான சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் கடந்த சீசனில் இருந்து  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன் சிங், தான் சென்னை அணிக்கு வந்ததில் இருந்து தமிழில் ட்விட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தீபாவாளி, தமிழர் திருநாள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், கஜாபுயல் பாதிப்பு அனைத்தும் ஹர்பஜன் தமிழில் ட்விட் செய்து தனது வாழ்த்துக்களையும், ஆதங்கம், வருத்தங்களையும் தெரிவித்து வந்தார்.

சிஎஸ்கே அணிக்கு வந்ததில் இருந்தே தமிழில் அவ்வப்போது ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை ஹர்பஜன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த சீசனில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், போட்டி முடிந்த பின்பும் சக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஹர்பஜன் தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்வீட் செய்து மகிழ்வித்தார்.

இந்நிலையில், இன்னும் ஒருவாரத்தில் ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், ஹர்பஜன் தமிழில் ட்விட்செய்துள்ளார். அதில் " பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்குரிய என்அருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன்.ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான் அதே உணர்வு தான் என்னுள் இப்போது #விசில்போடு, #சிஎஸ்கேபேன்அபிஷியல் " என்று தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close