[X] Close

ஐபிஎல் போட்டியில் தாதா: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு செல்லும் சவுரவ் கங்குலி


delhi-capitals-appoint-sourav-ganguly-as-advisor

  • போத்திராஜ்
  • Posted: 14 Mar, 2019 17:21 pm
  • அ+ அ-

புதுடெல்லி, பிடிஐ

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் வீரருமான சவுரவ் கங்குலி, ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றபின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை விளையாடினார் கங்குலி. அதன்பின், கம்பீரிடம் பொறுப்பை கொடுத்தபின் புனே வாரியர்ஸ் அணியில் இடம்பெற்ற நிலையில் கிரிக்கெட்டில் இருந்து விலகினார்.

அதன்பின் கிரிக்கெட்  வர்ணனையாளராக இருந்துவந்த கங்குலி, முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின்  ஆலோசகர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

சவுரவ் கங்குலி டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள டெல்லி நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், " எங்களின் வங்கப் புலிக்கு ஹலோ கூறுகிறோம். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆலோசகர் பொறுப்பை ஏற்கும் கங்குலியை நாங்கள் வரவேற்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கங்குலி கூறுகையில், " டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆலோசகராக செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜின்டால், ஜேஎஸ்டபிள்யு குழுமத்தை நன்கு அறிவேன். அவர்களின் விளையாட்டுக் குழுமத்தில் இணைவதிலும் மகிழ்ச்சி. டெல்லி அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றும் காலத்தை ஆர்வத்துடன் எதிர் நோக்குகிறேன் " எனத் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை ஐபிஎல் போட்டியில், டெல்லி அணி ஒருமுறை கூட சாம்பியன்  பட்டத்தை வென்றதில்லை.

ஆனால், இந்த முறைய ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர், கங்குலி ஆலோசகர், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை ஆகிய மிகப்பெரிய கூட்டணியில்டெல்லி கேபிடல்ஸ் அணி களம் காண்கிறது. வரும் 24-ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதுகிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணி விவரம்

ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்), ரிஷப் பந்த், ஷிகர் தவண், பிரித்வி ஷா, அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், ஹர்சல் படேல், ராகுல் திவேஷியா, மன்ஜோத் கல்ரா, கோலின் முன்ரோ, கிறிஸ் மோரிஸ், காகிஸோ ரபாடா, சந்திப் லாமிசானே, டிரன்ட் போல்ட், கோலின் இங்கிராம், அக்ஸர்  படேல், ஹனுமா விஹாரி, ரூதர்போர்ட், இசாந்த் சர்மா, கீமோ பால், ஜலாஜ் சக்சேனா, அங்குஷ் பைனாஸ், நாது சிங், பண்டாரு அய்யப்பா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close