[X] Close

கால் இறுதியில் ஜோஷ்னா


joshna

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 11:07 am
  • அ+ அ-

எகிப்தின் கெய்ரோ நகரில் மகளிருக்கான பிளாக் பால் ஸ்குவாஷ் ஒபன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் 16-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, 8 முறைஉலக சாம்பியன் பட்டம் வென்ற மலேசியாவின் நிக்கோல் டேவிட்டை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஜோஷ்னா, 6-ம் நிலை வீராங்கனையான இங்கி லாந்தின் சாரா ஜேன் பெர்ரியை எதிர்த்து விளையாடினார்.

இதில் ஜோஷ்னா 11-4, 6-11, 14-12, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். கடைசியாக சாராவை கடந்த 2012-ம் ஆண்டு சென்னை ஒபன் தொடரில் ஜோஷ்னா வீழ்த்தியிருந்தார். அதன் பின்னர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அவரை தோற்கடித்துள்ளார். கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான நியூஸிலாந்தின் ஜோயல் கிங் குடன் மோதுகிறார் ஜோஷ்னா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close