[X] Close

பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் ஜோகோவிச், ஒசாகா தோல்வி


bnp-paribas-tennis

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:56 am
  • அ+ அ-

பிஎன்பி பரிபாஸ் ஒபன் டென்னிஸ் தொடரில் முதல் வீரரான செர்பி யாவின் ஜோகோவிச் 3-வது சுற்றில் தோல்வியடைந்தார். இதேபோல் மகளிர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒசாகா 4-வது சுற்றுடன் வெளியேறினார்.

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 39-ம்நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரைபருடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். கோல்ஷ்ரைபரிடம் ஜோகோவிச் தோல்வியடைவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் நடைபெற்ற 8 ஆட்டங்களிலும் ஜோகோவிச்சே வெற்றி பெற்றி ருந்தார். பிலிப் கோல்ஷ்ரைபர் தனது 4-வது சுற்றில் பிரான்சின் கேல் மோன்பில்சுடன் மோதுகிறார்.

2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் அர்ஜென்டினாவின் டிகோ ஸ்க்வார்ட்ஸ்மேனையும், 4-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஸ்டான் வாவ்ரிங்காவையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 3-6, 1-6 என்ற நேர் செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கிடம் வீழ்ந்தார். மற்றொருஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 2-6, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் வாண்ட்ரோசோவாவிடம் வீழ்ந் தார். அதேவேளையில் அமெரிக்கா வின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close