[X] Close

பட்டியலில் இருந்து நீக்கக் கோரும் கிருஷ்ணசாமி பொதுத் தொகுதியில் போட்டியிடலாமே?- விளாசும் தென்காசி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய்


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 17:45 pm
  • அ+ அ-

இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஆரோன் பின்ச் 43 பந்துகளில், 27 ரன்கள் எடுத்த நிலை யில் ஜடேஜா பந்தில் போல்டானார்.

முதல் விக்கெட்டுக்கு கவாஜா வுடன் இணைந்து ஆரோன் பின்ச் 14.3 ஓவர்களில் 76 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் சிறப்பாக பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். குல்தீப் யாதவ் வீசிய ஓவர்களில் 2 சிக்ஸர்கள் விளாசிய உஸ்மான் கவாஜா 105 பந்துகளில் தனது 9-வது சதத்தை கடந்தார். இந்தத் தொடரில் அவர் அடித்த 2-வது சதமாகவும் இது அமைந்தது.

சிறப்பாக பேட் செய்து வந்த கவாஜா 106 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ஹேண்ட்ஸ்கம்புடன் இணைந்து கவாஜா 99 ரன்கள் சேர்த்திருந்தார். இதையடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ஒரு ரன் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் வெளியேறினார்.

நிதானமாக பேட் செய்த ஹேண்ட்ஸ்கம்ப் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஷ்டன் டர்னர் 20, மார்கஸ் ஸ்டாயினிஸ் 20, அலெக்ஸ் காரே 3, பாட் கம்மின்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹை ரிச்சர்ட்சன் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக் கெட்களையும் ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 273 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. ஷிகர் தவண் 12 ரன்களில் பாட் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 20 ரன்களில் ஸ்டாயினிஸ் பந்திலும் வெளியேறினர். 68 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ரிஷப் பந்த் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் சேர்த்த நிலையில் நேதன் லயன் பந்தில் சிலிப் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 16 ரன்களில் ஆடம் ஸம்பா பந்தில் நடையை கட்டினார். நிதானமாக பேட் செய்து வந்த ரோஹித் சர்மா 89 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆடம் ஸம்பா பந்தில் அலெக்ஸ் காரேவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். ஆடம் ஸம்பா வீசிய இதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெம்பிங் ஆனார்.

28.5 ஓவர்களில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளானது. இந்த சூழ்நிலையில் கேதார் ஜாதவுடன் இணைந்து புவனேஷ்வர் குமார் போராடினார். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 95 ரன்கள் தேவையாக இருந்தது. மேக்ஸ்வெல் வீசிய 42-வது ஓவரில் கேதார் ஜாதவும், ஆடம் ஸம்பா வீசிய அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமார் சிக்ஸர் விளாசினர்.

ரிச்சர்ட்சன் வீசிய 45-வது ஓவரில் சிக்ஸர் விளாசிய புவனேஷ்வர் குமார், பாட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் ஆரோன் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார் 54 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சேர்த்தார். கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த கேதார் ஜாதவ், ரிச்சர்ட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

கேதார் ஜாதவ் 57 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். இதைத் தொடர்ந்து மொகமது ஷமி 3, குல்தீப் யாதவ் 9 ரன்களில் நடையை கட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-2 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

2009-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் முதன்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. மேலும் தொடரில் 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்து ஒரு அணி அதில் இருந்து மீண்டு வந்து கோப்பையை வெல்வது இது 5-வது முறையாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close