[X] Close

சீனாவுக்கு எதிரான முன்னெடுப்பு: மசூத் அசார் மீது தடை விதிக்கும் தீர்மானம்- ஐ. நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய அமெரிக்கா


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 14:59 pm
  • அ+ அ-

டெல்லியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் தொடரை வெல்வதற்காக கடும் போட்டி மனப்பான்மையில் ஆடிவருகின்றன. இதில் ஆத்திரமடைந்தால் மூளை வேலை செய்யாது என்பதற்கிணங்க பும்ரா நடந்து கொண்டது கூடுதல் ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க நேரிட்டது.

இது போன்ற நிகழ்வுகள் கிரிக்கெட்டில் சகஜம் என்றாலும், டெல்லி போன்ற தாழ்வான மந்தமான பிட்ச்களில் கூடுதல் ரன்கள் சிறிய அளவேயிருந்தாலும் அது வெற்றியைக் கடினப்படுத்துவதாகும். மேலும் அந்த நிலையில் அப்படிப்பட்ட ஒரு த்ரோ அவசியமில்லை என்றுதான் அனைவரும் கருதுவார்கள். 

இன்னிங்சின் 48வது ஓவரை பும்ரா வீசினார், அதுவரை  8 ஓவர்களில் 14 ரன்களையே விட்டுக் கொடுத்து அடிப்பதற்குக் கடினமான பவுலராக இருந்தவர் ஆத்திரத்தினால் அந்த ஓவரில் 19 ரன்களை விட்டுக் கொடுக்க நேரிட்டது.

அந்த ஓவரின் முதல் பந்து ரிச்சர்ட்ஸன் 2 ரன்களை எடுத்தார். இரண்டாவது பந்து வேண்டுமென்றே எட்ஜ் ஆக்கினார் ரிச்சர்ட்ஸன், பந்த்தின் தாவலையும் மீறி பந்து தேர்ட்மேன் பவுண்டரிக்குப் பறந்தது. அடுத்த பந்தை பளார் என்று கவர் திசையில் பவுண்டரி அடித்தார் ஜை ரிச்சர்ட்சன், இதனையடுத்து ஆத்திரம் கொப்புளிக்க பும்ரா அடுத்த பந்தை வீசினார், அது ஒரு பிரமாதமான யார்க்கர், அதை ரிச்சர்ட்ஸன் எதிர்பார்த்தோ என்னவோ தடுத்தாட பந்து பும்ராவிடமே வந்தது. 

ஏற்கெனவே கோபத்தில் இருந்ததால் பந்தை எடுத்து ஒரு ஜை ரிச்சர்ட்ஸன் முனைக்கு ஸ்டம்பை நோக்கி த்ரோ ஒன்றை அடித்தார். அது தேர்ட் மேன் பவுண்டரிக்குப் பறந்தது, தடுக்க முடியவில்லை. அருமையான யார்க்கர், டாட் பந்தாக வேண்டியது ஆத்திரத்தினால் ஒரு கூடுதல் பவுண்டரி ஆனது. அதே ஓவரில் கமின்ஸும் மிகப்பிரமாதமாக தேர்ட் மேன் திசையில் திருப்பி விட்டு இன்னொரு பவுண்டரி அடிக்க 19 ரன்கள் கொடுத்தார் பும்ரா, அவரது அனாலிசிசும் 9 ஓவர் 33 ரன்களானது. 

175/1 என்று இருந்த ஆஸ்திரேலியா அதன் பிறகு சீரிய பந்து வீச்சினால் மேலும் 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்த நிலையில் இந்த ஓவர் ஆஸ்திரேலியாவின் புத்தெழுச்சிக்கு வித்திட்டது. இலக்கை எதிரணி விரட்டும்போது ஒரு முக்கியக் கட்டத்தில் இப்படி ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தாமல் பவுண்டரி கொடுத்தால் என்ன ஆகும்? பும்ரா யோசிக்க வேண்டும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close