[X] Close

5-வது போட்டி: டாஸ்வென்றது ஆஸி.: இந்திய அணியில் இரு மாற்றம்


australia-opt-to-bat-in-series-decider

  • போத்திராஜ்
  • Posted: 13 Mar, 2019 14:05 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி,

புதுடெல்லியில் இன்று நடைபெறும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா  வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரைக் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வென்று 2-2 என்ற சமநிலையில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ன் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய அணி சார்பில்2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாஹலுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும், கே.எல். ராகுலுக்கு பதிலாக முகமது ஷமியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி மைதானத்தின் ஆடுகளம் சராசரியானது, கடந்த 2 ஆண்டுகளாக அதிகமான சர்வதேச ஆட்டங்கள் நடத்தப்படவில்லை. இங்கு பெரியஅளவுக்குஅணிகள் ஸ்கோர் செய்வதும் கடினம், அதேசமயம், ஸ்கோரையும் சேஸிங் செய்வதும் எளிதானது அல்ல.

.ஆஸ்திரேலிய அணியில் மார்ஷுக்கு பதிலாக ஸ்டோனிஸ், , பெஹரன்டார்ப் பதிலாக லயான் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்:

ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, ரிஷப் பந்த், கேதார் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா

ஆஸி.அணி விவரம்:

ஆரோன்  பிஞ்ச், உஸ்மான் கவாஜா, லயான், பீட்டர் ஹேண்ட்ஸ் கம்ப், களென் மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் காரே, ரிச்சார்ட்ஸன், பாட் கம்மின்ஸ், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close