[X] Close

நிதி சீர்திருத்தம் - ஓர் உலக அனுபவம்!


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 06:11 am
  • அ+ அ-

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியும், அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கண்டன. இதனால் தொடர் 2-2 என சமநிலை வகிக்கிறது.

இந்நிலையில் தொடரை யார் வெல்வது என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இந்திய அணியின் பந்து வீச்சை உலக கிரிக்கெட் அரங்கம் சமீபகாலமாக வெகுவாக பாராட்டி வந்த நிலையில் மொஹாலியில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் சரளமாக ரன்கள் குவித்தார்கள்.

அந்த ஆட்டத்தில் பெரிய அளவிலான இலக்கை (359 ரன்கள்) பேட்ஸ்மேன்கள் அமைத்துக் கொடுத்த போதிலும் அதை பாதுகாத்துக்கொள்ள இந்திய பந்து வீச்சாளர்கள் தவறினர். இதனால் இந்திய அணியின் பந்து வீச்சு கடும் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக பந்து வீச்சாளர்களை கேப்டன் விராட் கோலி பயன்படுத்திய விதமும், நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதிலும் ஒரு கட்டத்தில் தேக்கம் அடைந்தார்.

களத்தில் தோனி இல்லாததை அந்த தருணங்கள் வெட்டவெளிச்சமாக்கின. குறுகிய வடிவிலான போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றது முதல் அவருக்கு தேவையான ஆலோசனைகளை ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்து கொண்டு தோனியே வழங்கி வந்துள்ளார்.

தோனி இல்லாத இன்றைய ஆட்டமும் விராட் கோலி தன்னை கேப்டனாக நிலைநிறுத்திக் காட்டுவதற்கு ஒரு சோதனை களமாகவே இருக்கும். தட்டையான மொஹாலி ஆடுகளமானது பந்து வீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என்றாலும் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சை கொண்டுள்ள இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆஷ்டன் டர்னரின் அதிரடி ஆட்டத்தாலும், இந்திய அணியின் மோசமான பீல்டிங்காலும் ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றியை பதிவு செய்தது. பனிப்பொழிவை காரணம் காட்டி ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இலக்கை துரத்தியது, ஆனால் மொஹாலி ஆட்டத்தில் முதலில் பேட் செய்தது. இந்த இரு ஆட்டத்திலும் இந்திய அணியின் கணிப்பு பொய்த்து போனது.

ஏனெனில் ராஞ்சி போட்டியில் இந்திய அணி இலக்கை துரத்திய போது ஆடுகளம் உலர்ந்தே காணப்பட்டது. பனிப்பொழிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக மொஹாலி ஆட்டத்தில் பனிப்பொழிவின் தாக்கம் ஆஸ்திரேலிய அணி இலக்கை அடைய பெரிய அளவில் உதவியது.

இன்றைய ஆட்டம் நடைபெறும் பெரோஷா கோட்லா ஆடுகளம் வழக்கமாகவே மந்தமாக செயல்படக்கூடியதுதான். இதனால் எந்தவித ஆச்சரியமும் இருக்க வாய்ப்பில்லை. இந்திய அணி இங்கு கடைசியாக மோதிய இரு ஆட்டங்களில் ஒரு தோல்வி, ஒரு வெற்றியை பதிவு செய்திருந்தது. மேலும் இந்த இரு ஆட்டங்களிலும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கப்படவில்லை.

2016-ம் ஆண்டு அக்டோபரில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்திருந்தது. முன்னதாக 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியிருந்தது.

தொடக்க வீரரான ஷிகர் தவண் கடந்த ஆட்டத்தில் 115 பந்துகளில் 143 ரன்கள் சேர்த்து பார்முக்கு திரும்பியிருப்பது டாப் ஆர்டர் பேட்டிங்கின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இன்றைய ஆட்டம் அவரது சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றக்கூடும்.

பெரோஷா கோட்லா ஆடுகளத்தில் கடந்த சில ஆட்டங்களில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். வேகத்தை குறைத்து வீசும் பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் நன்கு கைகொடுக்கும் என்பதால் இந்த கூட்டணி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

டி 20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது போன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரையும் வெல்வதில் ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா சீராக ரன்கள் சேர்ப்பது பலமாக உள்ளது. இதனால் அவரை விரைவில் வெளியேற்றுவதில் இந்திய பந்து வீச்சாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், ஆஷ்டன் டர்னர் ஆகியோரது பங்களிப்பு ஆஸ்திரேலிய அணியை மீண்டும் பழைய ஆதிக்க நிலைக்கு அழைத்துச் செல்வது போன்று உள்ளது. பந்து வீச்சில் ஆடம் ஸம்பா இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லைதரக்கூடும்.

இன்றைய ஆட்டமானது உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்துள்ளது. இதனால் இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கோப்பையை வெல்வதில் இந்திய அணி வீரர்கள் தீவிர முனைப்பு காட்டக்கூடும். மேலும் விஜய் சங்கர், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க இறுதி வாய்ப்பாகவும் இந்த ஆட்டம் அமையக்கூடும். இவர்களில் விஜய் சங்கர் பேட்டிங்கில் அணியின் நம்பிக்கை பெற்றுள்ளார்.

கே.எல்.ராகுலுக்கு ஒரு ஆட்டத்தில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதேவேளையில் பேட்டிங்கில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடியவராக அறியப்பட்டுள்ள ரிஷப் பந்த், விக்கெட் கீப்பிங் பணியில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறுவது பலவீனமாக உள்ளது. ரவீந்திர ஜடேஜாவும் தன்னை அணியில் நிலைப்படுத்திக் கொள்ள சிறப்பாக செயல்பட வேண்டி உள்ளது. பெரோஷா கோட்லா ஆடுகளம் மெதுவான பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விளையாடும் லெவனில் ஜடேஜா இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

நேரம்: பிற்பகல் 1.30நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close