[X] Close

2019 உ.கோப்பை சிறந்த பேட்ஸ்மேன் யார்? -விராட் கோலி இல்லை: ஷேன் வார்ன் கணிப்பு என்ன?


2019-world-cup-india-australia-odi-series-cricket-shane-warne-kohli-david-warner

  • முத்துக்குமார்
  • Posted: 12 Mar, 2019 19:33 pm
  • அ+ அ-

2019 உலகக்கோப்பை எந்தப் போக்கில் போகும் என்று கணிக்க முடியாத நிலையில் இப்போதே கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஷேன் வார்ன் தன் உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியை வெளியிட்டதோடு நிற்காமல் தற்போது யார் சிறந்த 2019 உலகக்கோப்பை பேட்ஸ்மன் என்று ஒரு கணிப்பையும் வெளியிட்டுள்ளார். 

முன்னாள், இந்நாள் வீரர்களில் பலர் இந்திய கேப்டன் விராட் கோலியின் அபரிமிதமான பார்ம் தொடர்ந்தால் அவர்தான் வரும் உலகக்கோப்பையின் ரன் மெஷின், நாயகன் என்றெல்லாம் கூறி வரும் நிலையில் ஷேன் வார்ன் மாற்றுக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் அணிக்குத் திரும்பி வந்தால் அது எப்படி அமையும் என்று தன்னை சஸ்பெண்ட் செய்த போது, தான் திரும்பி வந்து எப்படிப்பட்ட உத்வேகத்துடன் ஆடினார் என்பதுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். 

2003 உலகக்கோப்பையில் ஊக்க மருந்து விவகாரத்தினால் இவர் ஆஸி. கிரிக்கெட் வாரியத்தினால் தடை செய்யப்பட்டு அந்த உலகக்கோப்பையை இவர் இல்லாமலேயே ஆஸ்திரேலியா வென்றது. 

அதன் பிறகு மீண்டும் வந்த போது தன் மனநிலை குறித்துப் பேசிய ஷேன் வார்ன், “தடைக்குப் பிறகு மீண்டும் அணிக்கு வந்து ஆடிய அந்த 4 ஆண்டுகள்தான் என் வாழ்க்கையின் மிகச்சிறந்த கிரிக்கெட் காலமாக அமைந்தது. நான் கிரிக்கெட்டுக்காக ஏங்கினேன். என் மனமும் உடலும் புத்துணர்வுடன் இருந்தது. 
ஆகவேதான் கூறுகிறேன் டேவிட் வார்னர், ஸ்மித் நிச்சயம் ஒரு எழுச்சி மனநிலையில்தான் உள்ளே வருவார்கள். 

அவர்கள் வந்து பந்து வீச்சை அடித்து நொறுக்கப் போகிறார்கள். ஆகவே டேவிட் வார்னரைத்தான் 2019 உலகக்கோப்பை தொடரின் நாயகனாக கணிக்கிறேன்” என்று ஷேன் வார்ன் டெலிகிராப் ஸ்போர்ட் ஊடகத்தில் கூறியுள்ளார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close