[X] Close

மூழ்கும் கப்பலை மீட்கும் முயற்சி: பிரதமர் பெருமிதத்துக்கு மம்தா பதிலடி


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 14:30 pm
  • அ+ அ-

நடிகர் ரஜினிகாந்த மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்பையில் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. தேசிய அளவில் பல்வேறு துறையைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகர் ரஜின்காந்த் மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து ஹர்பஜன் சிங் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

ட்விட்டரில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஹர்பஜன், அதனுடன், "வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இரெண்டு ஸ்டம்புகளுக்கு நடுவில் இருக்கலாம் அல்லது ஒரு பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளுக்கு நடுவிலும் இருக்கலாம் எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸு, எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸ்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பல முறை தமிழில் ட்வீட் செய்து வருகிறார் ஹர்பஜன். அவரது தமிழ் ட்வீட்டுகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது இந்த தமிழ் ட்வீட்டும் பலரால் பாராட்டப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close