[X] Close

'ஒருமுறையாவது கைதாக வேண்டும்'- 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை- நெகிழ்ச்சி சம்பவம்


104

  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 16:59 pm
  • அ+ அ-

இந்திய ஒருநாள், டி20 அணிகள் இன்னமும் கூட செட்டில் ஆகாத நிலையில் அஸ்வினுக்கு இன்னொரு வாய்ப்பளிக்கலாம் என்று பலரும் கருதும் நிலையில்,  தனக்கு கிரிக்கெட் ஆட்டம் தான் முக்கியம், அணித்தேர்வு பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

பந்தை ஒவ்வொரு விதமாக ரிலீஸ் செய்வதும் பந்தின் விதவிதமான கோணங்களும், ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், கேரம் பந்து, பிளிப்பர் என்று கைகளில் வித்தையை வைத்திருக்கும் அஸ்வின் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் வெற்றி வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தேர்வு செய்யப்படுவது பற்றி கவலையில்லை, கற்றுக் கொண்டேயிருப்பதுதான் முக்கியம் என்கிறார் அஸ்வின். 

சென்னையில் மின்சாரம் அல்லாது இயங்கும் பந்து வீச்சு எந்திரம் இயங்கும் முறைகளை விளக்கிய நிகழ்ச்சியில் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்காக பேசிய அஸ்வின் கூறியதாவது:

நான் அணித்தேர்வு பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் வீரராக மேம்படுவது அவசியம். நான் மேம்பட்டிருக்கிறேன். எனக்கு என்ன தேவையோ அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இதைத்தவிர வேறு எதைப்பற்றியும் நான் கவலைப்படுவதில்லை. 

கிங்ஸ் லெவன் அணியில் முருகன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி இருப்பது எனக்கு உற்சாகமூட்டுகிறது. முருகன் அஸ்வின் பவுலிங்கை நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். டி.என்.சி.ஏ.வில் என் லீக் அணிக்கும் அவர் ஆடுகிறார். வருண் டி.என்.பி.எல் டி20-யில் அருமையாகச் செயல்பட்டதையும் அறிவேன். வருண் சக்ரவர்த்தியிடமிருந்து சில விஷங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். 

ஐபிஎல் ஒரு பெரிய வாய்ப்பு, அதை மகிழ்ச்சியுடன் ஆடி அதில் நான் பிரமாதமாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close