[X] Close

அரசியலை சாக்கடை என்று ஒதுக்கி விடாதீர்கள்: விஜய் சேதுபதி


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 12:34 pm
  • அ+ அ-

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்தி ரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஷிகர் தவண், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடியது வீணானது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணி களுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 போட்டிகள் முடி வடைந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று 4-வது ஒரு நாள் போட்டி மொஹாலி யில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப் பட்டிருந்தன. மொகமது ஷமி, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், யுவேந்திர சாஹல் ஆகியோர் சேர்க் கப்பட்டிருந்தனர். ஆஸ்திரேலிய அணியில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸுக் குப் பதிலாக ஆஷ்டன் டர்னர் அணியில் இடம்பெற்றார்.

முதலில் ஆடிய இந்தியா, 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

முன்னதாக இந்திய அணியின் இன்னிங்ஸை ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் தொடங்கினர். ஒருபுறம் ஷிகர் தவண் அதிரடியாக விளையாட, ரோஹித் நிதானமாக விளையாடினார். முதலில் தவண் அரை சதம் கடந்தார். பின்னர் அரை சதத்தை எட்டிய ரோஹித் வேகமாக ரன் குவித்தார். சதத்தை நெருங்கிய வேளையில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 92 பந்துகளில் 95 ரன்களைக் குவித்தார். அதில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்-தவண் ஜோடி 193 ரன்கள் குவித்தது.

பின்னர் தவணுடன், கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். தவண் தனது அதிரடியைத் தொடர்ந்து சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டியில் அவர் எடுக்கும் 16-வது சதமாகும் இது. அதன் பிறகு அவர் பவுண்டரிகளாக விளாச ஆரம்பித்தார். அவர் 115 ரன்களில் 143 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 18 பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கோலி நீண்ட நேரம் நிலைக்க வில்லை. அவர் 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். கடைசி நேரத்தில் ரிஷப் பந்த், விஜய் சங்கர் ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். ரிஷப் பந்த் 24 பந்துகளில் 36 ரன்களும், விஜய் சங்கர் 15 பந்துகளில் 26 ரன்களும் சேர்த்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 5, ரிச்சர்ட்ஸன் 3, ஆடம் ஸாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணியின் பேட் டிங்கின்போது தொடக்கத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தி யம் அளித்தார் புவனேஸ்வர். கேப் டன் ஆரோன் பின்ச்சை முதல் ஓவரி லேயே வீழ்த்தினார் புவனேஸ்வர். பின்ச் ரன் கணக்கைத் தொடங்க வில்லை.

இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஷான் மார்ஷ் 6 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்பும், கவாஜா வும் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இருவரும் நிதானமாக விளையா டியது மட்டுமல்லாமல், பவுண் டரிக்கு அவ்வப்போது பந்துகளை விரட்டினர். இருவரும் அடுத்தடுத்து அரை சதம் கடந்தனர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடியைப் பிரிக்க முடியா மல் இந்திய பவுலர்கள் சிரமப்பட்டனர்.

அணியின் ஸ்கோர் 204-ஆக இருந்தபோது இந்த ஜோடியைப் பிரித்தார் பும்ரா. கவாஜா 91 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 3-வது விக்கெட்டுக்கு ஹேண்ட்ஸ்காம்ப் - கவாஜா ஜோடி 192 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஹேண்ட்ஸ்காம்புடன், கிளென் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ஹேண்ட்ஸ்காம்ப் ஒரு நாள் போட்டி யில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார்.

அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 23 ரன்களில், குல் தீப் பந்தில் வீழ்ந்தார். 117 ரன்களில் ஹேண்ட்ஸ்காம்ப் அவுட்டானார். இதைத் தொடர்ந்து வந்த கேரே, டர்னர் ஜோடி அபாரமாக விளையா டியது. டர்னர் அதிரடியாக ரன்கள் குவித்தார். சிக்ஸரும், பவுண்டரியு மாக அவர் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். வெற்றிக்கு சிறிது முன்னதாக கேரே 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 47.5 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.

டர்னர் 84 ரன்கள் எடுத்து ஆட்ட மிழக்கால் இருந்தார். ரிச்சர்ட்ஸன் ரன் எடுக்கவில்லை.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தற்போது இரு அணிகளும் இந்தத் தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இரு அணிகளிடையிலான கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ளது.

சிக்ஸரில் தோனியை முந்திய ரோஹித்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியின்போது அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் வரிசையில் எம்.எஸ். தோனியை, ரோஹித் சர்மா முந்தினார்.நேற்றைய ஆட்டத்தின்போது அவர் 2 சிக்ஸர்ளை விளாசினார். இதன்மூலம் அவரது சிக்ஸர் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. இதன்மூலம் தோனியின் 217 சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை ரோஹித் தாண்டினார்.

ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் வரிசையில் ரோஹித் 218 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் தோனி 217 சிக்ஸர்களுடனும், 3-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 195 சிக்ஸர்களுடனும், 4-வது இடத்தில் கங்குலி 189 சிக்ஸர்களுடனும், 5-வது இடத்தில் யுவராஜ் சிங் 153 சிக்ஸர்களுடனும் உள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close