[X] Close

'நீட்' தேர்வு ரத்து, எழுவர் விடுதலை போன்ற அதிமுகவின் வாக்குறுதிகள் பசப்பு நாடகம்: இரா.முத்தரசன் விமர்சனம்


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 12:47 pm
  • அ+ அ-

 

கராச்சி, பிடிஐ

இந்திய வீரர்கள் கிரிக்கெட்டா  விளையாடுகிறார்கள், ராணுவ தொப்பி அணிந்து விளையாடுவதை ஐசிசி பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் என்று பாகிஸ்தான் அமைச்சர்கள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியினர் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பி அணிந்து விளையாடினார். மேலும், இந்த ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கவும் கோலி தலைமையிலான அணியினர் முடிவு செய்திருந்தனர்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வீரர்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகின்ற நிலையில் நேற்றைய ஆட்டமும் உணர்வுப்பூர்வமாக பார்க்கப்பட்டது.

ஆனால், இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து கிரிக்கெட் விளையாடியதை பாகிஸ்தான் அமைச்சர்களால்  பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரோஷி ட்விட்டரில் கூறுகையில், " இந்திய கிரிக்கெட் தங்களின் அணிக்குரிய தொப்பியை அணிந்து விளையாடுவதற்கு பதிலாக இந்திய ராணுவத்தின் தொப்பி அணிந்து விளையாடியதை இந்த உலகமே பார்த்தது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) பார்க்கவில்லையா. இந்த விஷயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்கும் முன், ஐசிசி கவனித்து, இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐசிசியின் பொறுப்பாகும் " எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி ட்வி்ட்டரில் கூறுகையில், " இந்திய அணியின் செயல் சாதாரணமானது அல்ல. இது கிரிக்கெட்தானே என்று விட்டுவிட முடியாது.  இதுபோன்ற செயல்களை இந்திய அணி நிறுத்திக்கொள்ளாவிட்டால், உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும். காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்யும் அட்டூழியத்தை கண்டித்தும், உலகின் பார்வையை திருப்பும் வகையிலும் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும் " எனத் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close