[X] Close

எங்களையெல்லாம் கேலி செய்கிறீர்களா கோலி?- கெவின் பீட்டர்சனின் வித்தியாசப் புகழாரம்


  • kamadenu
  • Posted: 09 Mar, 2019 14:06 pm
  • அ+ அ-

எங்களை கேலி செய்கிறீரா கோலி என்று இங்கிலாந்துமுன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விராட் கோலியின் தொடர் சதம் குறித்து தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற 3 - வது ஒருநாள் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி  இந்திய அணியை  32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இதில் இந்தி அணியின் கேப்டன் விராட் கோலி  95 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 123 ரன்கள் எடுத்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் விராட் கோலி அடிக்கும் தொடர்  இரண்டாவது சதமாகும்.

தொடர்ச்சியாக சதம் அடித்த விராட் கோலிக்கு கிரிக்கெட்  வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விராட் கோலியின் தொடர் சதத்துக்கு வாழ்ந்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் எங்களை கேலி செய்கிறீரா கோலி?  நாங்கள் எல்லாம் சாதாரணமாக விளையாடுகிறோம் என்று..”  அதாவது நாங்கள்லாம் ஏதோ ஓகேயாக பேட் செய்கிறோம்... எங்களிடம் திறமையில்லை அதானே உங்கள் ஆட்டம் மூலம் சொல்ல வருகிறீர்கள்.. என்று ஜாலியாக கிண்டல் மூலம் விராட்டை புகழ்ந்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close