[X] Close

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியை ஆதரிக்க ஆசிரியர் சங்கங்கள் முடிவு


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 06:27 am
  • அ+ அ-

ஜார்கண்ட் ஒருநாள் போட்டியில் உஸ்மான் கவாஜா பிரமாதமாக ஆடி விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் சதமெடுக்க 244/2 என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா சிறு சரிவைச் சந்தித்ததில் கடைசி 10 ஓவர்களில் பெரிய இலக்கை எட்ட முடியாமல் 313 ரன்களுக்கு இந்திய அணி அவர்களை மட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் ஜார்கண்டில் ஆஸ்திரேலியா எடுத்த இந்த ஸ்கோர்தான் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராகும் இதுவரை, இந்தியா வெற்றிகரமாக விரட்டி விட்டால் அது அதிகபட்ச ஸ்கோராகும்.

ஒருநாள் போட்டிகளில் தன் முதல் சதமெடுத்த உஸ்மான் கவாஜா 113 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்தார், ஏரோன் பிஞ்ச் 99 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 93 ரன்கள் எடுத்து சர்ச்சைக்குரிய ரீப்ளேயில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 31.5 ஓவர்கள்ல் முதல் விக்கெட்டுக்காக 193 ரன்களைச் சேர்த்தனர்.

ஆனால் 244/2 என்ற நிலையில் அதுவ்ரை அடிவாங்கிய குல்தீப் யாதவ் பந்துகள் திடீரென நின்று வரத்தொடங்க கடைசி 10 ஓவர்களில் 100க்கும் மேல் அடித்து 350 பக்கம் வந்திருக்க வேண்டிய ஆஸி. ஸ்கோர் 313 ரன்களுக்கு மட்டுப்பட்டது. 

இன்று இந்திய அணியின் பீல்டிங் மோசம், ஏராளமான மிஸ்பீல்ட்கள், ராயுடு, விஜய் சங்கர், நமதருமை கேப்டன் கோலி என்று அனைவரும் சொதப்பினர், ஆனால் முரண் என்னவெனில் ஆட்டத்தின் திருப்பு முனை ஜடேஜா, தோனி கூட்டுமுயற்சியில் விளைந்த ரன் அவுட்டினால்தான். 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என கண்டபடி அச்சுறுத்தலாக ஆடிய் கிளென் மேக்ஸ்வெல் கவர் திசையில் ஜடேஜா அருமையாக ஒரு ஷாட்டைத் தடுத்து த்ரோ அடிக்க தோனி த்ரோவை அப்படியே ஸ்டம்பை நோக்கி பிளிக் செய்ய மேக்ஸ்வெல் ரீச் ஆகவில்லை. இதுதான் திருப்பு முனை. 

இதற்குப் பிறகு குல்தீப் யாதவ் 44வது ஓவரில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.  இந்த 3 விக்கெட்டுகளும் ஆஸ்திரேலியாவைப் பின்னடையச் செய்தன. 

தொடக்கத்தில் ராஞ்சி பிட்ச் பேட்டிங்குக்கு அருமையாக இருந்தது, இந்தப் பிட்சில் சேவாக், கில்கிறிஸ்ட், ஜெயசூரியா போன்றோரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழும், ஆனால் கவாஜாவும் பிஞ்ச்சுமே அடித்தே ஆடினர். பவர் ப்ளேயில் 7 பவுண்டரிகளை கவஜா மட்டுமே அடித்திருந்தார்.  பிஞ்ச்சின் சக்தி வாய்ந்த நேர் ட்ரைவில் பவுலர் ஷமி அடிவாங்கி சிறிது நேரம் பெவிலியனில் செலவழிக்க நேரிட்டது.  ஜடேஜாவை  3 பவுண்டரிகளையும் குல்தீப்பை தொடக்கத்தில் 2 பவுண்டரிகளையும் விளாசினர் பிஞ்ச், கவாஜா கூட்டணி. 

அடுத்து வந்தார் அரைக்கை பவுலர் ஜாதவ், இவரை ஒரு லாலி பாப் பவுலராக்கினார் பிஞ்ச். லாங் ஆனில்  வந்தவுடன் சிக்ஸ் தூக்கி வரவேற்றார். அடுத்த ஜாதவ் ஓவரில் மேலும் 2 சிக்சர்கள் பறக்கவிட 2 ஓவர்களில் அரைக்கை பவுலர் 32 ரன்களுக்கு போதும் என்று நிறுத்தப்பட்டார். இது ஒருநாளைக்கு நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். 

இருவரும் அரைசதம் கடந்து சென்றனர், குல்தீப் யாதவ் பந்தும் மட்டைக்கு நன்றாக வந்ததல அடி வாங்கினார். முதல் விக்கெட்டை குல்தீப் வீழ்த்தினார், சர்ச்சைக்குரிய அந்த அவுட் (உஷ் கண்டுக்காதீங்க ரகம்) ஆன பிறகு கவாஜா சதம் எடுத்தார். ஷமி பந்தை நேராக மிட்விக்கெட்டில் புல் ஆடி கேட்ச் ஆனார். 

கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டினால் ரன் விகிதம் பாதிக்காதவாறு 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று 47 ரன்களை எடுத்த நிலையில் ஜடேஜா, தோனி கூட்டணியில் ரன் அவுட் ஆக திருப்பு முனை நிகழ்ந்தது. அடுத்ததாக பந்து திரும்பத் தொடங்கியது குல்தீப் யாதவ், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோரை வெளியேற்றினார். ஹேண்ட்ஸ்கம்ப் எல்.பி. தீர்ப்பும் சர்ச்சைக்குரியதுதான், ஆனால் ஆஸ்திரேலியாவிடம் ரிவியூ இல்லை.  ஸ்டாய்னிஸ் (31), கேரி (21) மிகவும் புத்திசாலித்தனமாக ஆடி விக்கெட்டைக் கொடுக்காமல் 313 ரன்களை உறுதி செய்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மீண்டும் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இந்திய அணி விரட்டலில் சொதப்பி வருகிறது இதுவரை 3 விக்கெட்டுகளை இழந்து 27/3 என்று தடுமாறி வருகிறது, நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, தோனி ஆடி வருகின்றனர், விஜய் சங்கரை இறக்க வேண்டிய இடத்தில் தோனியை இறக்கியுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close