[X] Close

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வாக்குகளை பெற அமமுக திட்டம்


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 06:22 am
  • அ+ அ-

கர்னல் தோனிக்கு ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவ் அடிக்கும் கச்சித சல்யூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் இப்போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடுகின்றனர்.

கடந்த மாதம் 14-ம் தேதி, இந்திய ராணுவத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தேசிய பாதுகாப்புக்கு துறைக்குப் பொதுமக்கள்  நிதி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும் ராணுவ உடையிலானதொப்பியை அணிந்து களத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதற்கான தொப்பியை இந்திய அணி வீரர் தோனி சக வீரர்களுக்கு வழங்கினார். ராணுவத்தின் மீது தோனி வைத்திருக்கும் பற்று குறித்து புதிதாகச் சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு தோனி தொப்பியை அளிக்கும்போது கேதார் ஜாதவ் யாரும் எதிர்பார்க்காத காரியத்தைச் செய்தார்.

ஆல் ரவுண்டர் ஜாதவின் கையில் தோனி தொப்பியைக் கொடுத்தவுடன் கச்சிதமான சல்யூட் ஒன்றை அடித்தார் ஜாதவ். இந்திய கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ள இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோவைக் காண

https://www.instagram.com/p/BuvTXViAd7F/?utm_source=ig_embed

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close