[X] Close

ராதாரவி பேச்சு; யுவன் பெயர் நீக்கப்பட்டதன் பின்னணி: இரு சர்ச்சைகளுக்கு தயாரிப்பாளர் மதியழகன் விளக்கம்


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 20:34 pm
  • அ+ அ-

25 கிரிக்கெட் வீரர்களின் புதிய ஒப்பந்த விவரங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  இதில் ஏ+ பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே உள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் பிரமாதமாக ஆடும் புஜாரா ரூ 5கோடி ஏ கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஒன்றுமே ஆடவில்லை, அவர் பெயர் ஏ+ கிரேடில் உள்ளது, ஆனால் புஜாரா பெயர் ஏ+ கிரேடில் இடம்பெறவில்லை. 

புவனேஷ்வர் குமார், ஷிகர் தவன் ஆகியோர் கடந்த ஒப்பந்தத்தில் ஏ+ கிரேடில் இடம்பெற்றிருந்தனர். இம்முறை தவணின் மோசமான பார்ம் காரணமாக ஏ+ கொடுக்காதது சரிதான், ஆனால் ரோஹித் எப்படி இடம்பெற்றார்? புஜாராவுக்குத்தானே நியாயமாக ஏ+ கிரேடு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்?

விஜய் சங்கர் நாக்பூர் ஒருநாள் போட்டி நாயகன், பேட்டிங் பந்து வீச்சு இரண்டிலும் நிரூப்பித்தவர் எந்த கிரேடும் வழங்கப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளார். அதே போல் எதிர்கால நட்சத்திரமான பிரித்வி ஷா, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய அதுவும் பாக்சிங் டே டெஸ்டில் மெல்போர்ன் முதல் நாள் பிட்சில் ஒருமுனையில் அட்டகாசமாக ஆடிய மயங்க் அக்சர்வால் ஆகியோருக்கு எந்த ஒரு ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. அகர்வால் மெல்போர்ன், சிட்னி இரண்டிலும் மிகப்பிரமாதமான ஆக்ரோஷ 2 அரைசதங்களை விளாசினார்.  இவர்களும் விஜய்சங்கரும் இல்லை ஒப்பந்த ஒதுக்கீடுகளில் லாஜிக்கும் இல்லை. இத்தனைக்கும் விஜய் சங்கர் உலகக்கோப்பைக்காக உத்தேச 18 வீரர்கள் அணியில் விஜய்சங்கர் இருக்கிறார். 

கருண் நாயர் நிலைமை மிகவும் பரிதாபம் முச்சதம் அடித்த பிறகு இரண்டு குறைந்த ஸ்கோர் இன்னிங்ஸ்களுக்காக ட்ராப் செய்யப்பட்டவர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்படவேயில்லை, சுனில் கவாஸ்கர் முதல் கங்குலி, கம்பீர் என்று அனைவரும் கேள்வி எழுப்பியும் திருப்திகரமான பதிலை எம்.எஸ்.கே. பிரசாத் இன்றும் தரவில்லை, இத்தனைக்கும் இந்திய அணிக்கு இங்கிலாந்தில் ஸ்வீப் ஷாட் பயிற்சியும் அளித்தார் கருண் நாயர். ஆனால் இன்று ஒப்பந்தத்திலேயே இல்லை, அவ்வளவுதான் அவர் கிரிக்கெட் வாழ்வும் கேள்விக்குறிதான். கிரேட் பியில் டெஸ்ட் போட்டிகளில் தடவி வரும் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஏ கிரேடில் வழக்கம் போல் எம்.எஸ்.தோனி. இதுவும் கேள்விக்குரியதே, ஏனெனில் 3 வடிவங்களிலும் ஆடாத இவர், சில போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்படுபவர் எப்படி ஏ கிரேடில் தேர்வு செய்யப்பட்டார்? ஆனால் இது உஷ்... கண்டுக்காதீங்க என்றால் கருண் நாயர் விவகாரம் உண்மையான பரிதாபமே. 

முரளி விஜய், அக்சர் படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல்,  ஜெயந்த் யாதவ் இவர்கள் அனைவரும் கடந்த ஒப்பந்தத்தில் கிரேட் சியில் இருந்தவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஒப்பந்தங்கள் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன, கிரிக்கெட் அல்லாத வர்த்தக சக்திகளின் செல்வாக்கு இதைத் தீர்மானிக்கிறதா? பிசிசிஐ நடத்தையில் இன்னும் கொஞ்சம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்த ஒப்பந்த ஒதுக்கீடு இன்னமும் வலுசேர்த்துள்ளது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close