[X] Close

மகனும், அண்ணன் மகனும் போட்டி ஏன்?- கர்நாடக முதல்வர் குமாரசாமி விளக்கம்


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 07:27 am
  • அ+ அ-

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை தன்வசப்படுத்தும்.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஹைதரா பாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத் தில் 6 விக்கெட்கள் வித்தியாசத் தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நாக்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத் தில் வெற்றியை வசப்படுத்தி இருந்தது.

2-வது ஆட்டத்தில் விராட் கோலி சேர்த்த 116 ரன்களும், இறுதிக்கட்ட ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா, விஜய் சங்கர் ஆகியோரின் நேர்த்தியான செயல்திறனும் வெற்றியில் முக் கிய பங்கு வகித்தன. இந் நிலையில் ராஞ்சியில் இன்று பிற்பகலில் நடைபெறும் 3-வது ஆட் டத்தில் இரு அணிகளும் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை இந்திய அணி தன்வசப்படுத்தும். தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் போட்டி நடைபெறு வதால் அவர், மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தோனி ஓய்வு பெறக்கூடும் என பரவலான கருத்து எழுந்து வரு வதால் தனது சொந்த ஊரில் அவர், விளையாடும் கடைசி சர்வ தேச போட்டியாக இன்றைய ஆட்டம் அமையக்கூடும் என கருதப்படு கிறது. ஏற்கெனவே கடந்த இரு ஆட்டங்களிலும் தோனி பேட்டிங் கில் களமிறங்கிய போதெல் லாம் ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அதற்கு குறைவு இருக்காது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் சிறிய மாற்றம் இருக்கக் கூடும் என தெரிகிறது. மோசமான பார்மில் உள்ள ஷிகர் தவண் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஷிகர் தவண் கடந்த 15 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஷிகர் தவணுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்தால், 4-வது இடத்தில் களமிறங்கி வரும் அம்பதி ராயுடு வெளியே அமரவைக்கப்படக்கூடும். நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரே ஒரு ஆட்டத்தில் 90 ரன்கள் சேர்த்த அவரிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவிலான திறன் வெளிப்படவில்லை.

தற்போதைய தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் அம்பதி ராயுடு அதிக பந்துகளை எதிர்கொண்ட நிலையில் குறைவான ரன்களே சேர்த்து ஆட்டமிழந்திருந்தார். அம்பதி ராயுடுவை நீக்கும் பட்சத் தில் பரீட்ச்சார்த்த முறையாக விராட் கோலியை 4-வது இடத்திலும், கே.எல்.ராகுலை 3-வது இடத் திலும் களமிறக்குவது குறித்தும் இந்திய அணி நிர்வாகம் ஆலோசிக் கக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க தொடர்ச்சி யாக சிறந்த திறனை வெளிப் படுத்தி வரும் வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா கடந்த ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந் தார். இன்றைய ஆட்டத்தில் அவர், மீண்டும் பார்முக்கு திரும்ப முயற்சிக்கக்கூடும். இதேபோல் 2-வது ஆட்டத்தில் சோபிக்கத் தவறிய கேதார் ஜாதவ், தோனி ஆகியோரிடம் இருந்தும் சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் இந்திய அணி கடந்த இரு ஆட்டத் திலும் அபாரமாக செயல்பட்டது. முதல் ஆட்டத்தில் தொடக்க ஓவர் களில் மொகமது ஷமி சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அதே வேளையில் 2-வது ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் பும்ரா அசத்தினார். இதே ஆட்டத்தில் கேதார் ஜாதவ், விஜய் சங்கர் ஆகியோர் கூட்டாக 5-வது பந்து வீச்சாளர் இல்லாத குறையை பூர்த்தி செய்தனர். இது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

இதில் விஜய் சங்கர் கடைசி ஓவரில் இரு விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பு செய்திருந்தார். இந்த உயர்மட்ட செயல்திறனால் அவரது தன்னம்பிக்கை அதிகரித்துள்ள துடன் கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். இதனால் இனி வரும் ஆட்டங்களில் விஜய் சங் கரை பந்து வீச்சில் முழுமையாக பயன்படுத்துவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். கடந்த இரு ஆட்டத்திலும் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ் வர் குமார் அணிக்கு திரும்பியுள் ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் இடம் பெறும் பட்சத்தில் ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத் தில் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த போதிலும் கடைசி கட்டத் தில் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் சுணக்கம் கண் டது. ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுத்த போதிலும் நடுவரிசை வீரர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அந்த அணி வீரர்கள் அதிக பந்துகளை வீணடிப்பது பலவீனமாக உள்ளது. முக்கியமாக கடந்த ஆட்டத்தில் ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகி யோர் சுழற்பந்து வீச்சில் ரன்கள் சேர்க்க கடுமையாக திணறினார் கள். கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் காரே ஆகியோர் கடுமையாக போராடிய தன் காரணமாகவே ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு செல்ல முடிந்தது.

ஆனால் தேவையில்லாத நேரத் தில் குல்தீப் யாதவுக்கு எதிராக அலெக்ஸ் காரே ஸ்வீப் ஷாட் விளை யாடி விக்கெட்டை பறிகொடுத்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றி யது. இதனால் இந்திய சுழற்பந்து வீச் சுக்கு எதிராக பேட்டிங் வியூகங் களை மாற்றியமைப்பதில் ஆஸ்தி ரேலிய அணி தீவிரம் காட்டக்கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஆஸ்திரேலிய அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.

நேரம்: பிற்பகல் 1.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close