[X] Close

சீனாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் பலி


26

  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 12:23 pm
  • அ+ அ-

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்கள் பலர் காயம் அடைந்துள்ள நிலையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

28-வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடர் வரும் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மலேசியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா, கனடா, கொரியா, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னணி வீரர்கள் பலர் காயம் அடைந்துள்ளதால் இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கேப்டனாக நடுகள வீரர் மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக டிபன்டர் சுரேந்தர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக அனுபவ வீரர்களான எஸ்வி சுனில், ஆகாஷ்தீப் சிங், ராமன்தீப் சிங், லலித் உபாத்யாய், ரூபிந்தர்பால் சிங், ஹர்மான்பிரீத் சிங், சிங்களன்சனா சிங் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.

அதேவேளையில் கோல்கீப்பராக அனுபவம் வாய்ந்த பி.ஆர்.ஸ்ரீஜேஷ் அணியில் உள்ளார். 2-வது கோல்கீப்பராக கிருஷ்ணன் பதக் சேர்க்கப்பட்டுள்ளார்.

அஸ்லான் ஷா கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி ஜப்பானை எதிர்கொள்கிறது.

அணி விவரம்

கோல்கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருண்ஷன் பதக்.

டிபன்டர்கள்: குரீந்தர் சிங், சுரேந்தர் குமார், வருண் குமார், பைரேந்திர லக்ரா, அமித் ரோஹிதாஸ், கோதாஜி சிங்.

நடுகள வீரர்கள்: ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, சுமித், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங் (கேப்டன்).

முன்கள வீரர்கள்: மன்தீப் சிங், சிம்ரன்ஜித் சிங், குர்ஜாந்த் சிங், ஷிலானந்த் லக்ரா, சுமித் குமார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close