[X] Close

முதல் டி 20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து


england-team-wins

  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 09:19 am
  • அ+ அ-

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் இஸ்லெட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 37 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், டேரன் பிராவோ 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் எடுத்தனர்.

ஷாய் ஹோப் 6, கிறிஸ் கெயில் 15, சிம்ரன் ஹெட்மையர் 14, பிராத்வெயிட் 0, ஆலன் 8, ஜேசன் ஹோல்டர் 7, ஆஷ்லே நர்ஷ் 13 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் கர்ரன் 4, கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 161 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார். அலெக்ஸ் ஹேல்ஸ் 11, ஜோ ரூட் 0, கேப்டன் மோர்கன் 8, டென்லி 30, பில்லிங்ஸ் 18 ரன்கள் சேர்த்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 2-வது ஆட்டம் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close