[X] Close

கடைசி ஓவரைவிட ஹிந்தி பேசுவதுதான் எனக்கு பிரஷர் :விஜய் சங்கர்


virat-kohli

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 14:51 pm
  • அ+ அ-

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே  நாக்பூரில் நடந்த இரண்டாது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் அற்புதமான தனிமனித போராட்ட சதத்தினால் 250 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம்  இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விஜய் சங்கருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில் வெற்றிக்குப் பிறகு, விஜய் சக்கரிடம் சக இந்திய வீரர் சாஹல் பேட்டி எடுத்தார். அதில்  உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது பிரஷரா..ஹிந்தி பேசுவது பிரஷரா..  என்று கேட்பார் அதற்கு விஜய் சங்கர் ”சிரித்துக் கொண்டே ஹிந்தியில் பேசுவதுதான் கொஞ்சம் பிரஷர்” என்று கூறுவார்.

மேலும் கடைசி ஓவர் குறித்து விஜய் சங்கர் , “ நான் தயராகவே இருந்தேன்.  நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.அதனையே செயல்படுத்தினேன்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close