[X] Close

பும்ராவைப் போலவே பந்து வீசும் ஹாங்காங் சிறுவன்: வைரலாகும் வீடியோ


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 06 Mar, 2019 13:29 pm
  • அ+ அ-

பந்து வீச்சில் தனிப்பாணியைக் கையாளும் ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே ஹாங்காங் யூ-13 லீகில் பந்துவீசும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

குறைந்த தூரமே ஓடி வந்து பந்து வீசும் முறையைக் கையாள்பவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. நடையும் ஓட்டமுமாகத் தொடங்கி பிறகு குறைந்த தூரத்திலிருந்து அதிக வேகத்தில் பந்து வீசும் பாணியைப் பின்பற்றுவார். வேகப்பந்து வீச்சுக்கான இலக்கணங்களில் அடங்காத அவரின் பாணிக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகம்.

 

2018 ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 10 டெஸ்ட்களில் ஆடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அறிமுக ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச அளவில் முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்று, 39 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.

 

சர்வதேச அளவில் அறிமுக ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டெரி ஆல்டர்மேன் 1981-ம் ஆண்டு 42 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 2-வது இடத்தில் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி அம்புரோஸ் 1988-ம் ஆண்டு 42 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவர்கள் இருவரின் சாதனையையும் பும்ரா முறியடித்து சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்தார்.

 

இதனிடையே இந்தியாவின் கவாஸ்கர் டிராபி வெற்றியை அடுத்து, ஆஸ்திரேலிய சிறுவர்கள் பும்ராவைப் போல பந்து வீசி விளையாடினர். இந்நிலையில் ஹாங்காங் 13வயதுக்குட்பட்டோர் லீகில் விளையாடிய சிறுவன் பும்ராவைப் போன்றே பந்துவீசி வருகிறார். இதுதொடர்பான வீடியோவை ஹாங்காங் கிரிக்கெட், தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close