[X] Close

சன்னி தியோல், பூனம் தில்லான், ஹர்பஜன்சிங்; பஞ்சாபில் பாலிவுட் நட்சத்திரங்களைப் போட்டியிட வைக்க பாஜக யோசனை


  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 17:22 pm
  • அ+ அ-

நாக்பூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தன் 40வது ஒருநாள் சதத்தை எடுக்க அவருடன் விஜய் சங்கர் ஒரு முக்கியமான கூட்டணி அமைத்ததையடுத்து இந்திய அணி 250 ரன்கள் இலக்கை எட்டியது, பிறகு கடைசி ஓவரில் 11 ரன்களை விஜய் சங்கர் திறம்பட தடுத்து 3 பந்துகளில் ஆட்டத்தை முடிக்க இந்திய அணி அபார 8 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றது.

ஆஸ்திரேலிய அணியை குல்தீப் யாதவ் மற்றும் பிற ஸ்பின்னர்கள் கையில் ‘ஆரஞ்சு’ பழத்தைக் கொடுத்து வீசச் சொன்னால் கூட சுருட்டி விடலாம் என்றே தோன்றுகிறது.  அந்த அளவுக்கு ஸ்பின் என்றாலே பதற்றம், தவறான ஷாட் தேர்வு, தப்பாட்டம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடுவதால்தான் இந்த இலக்குகளையெல்லாம் தோற்க நேரிடுகிறது. கேதார் ஜாதவ் பிட்சுக்கு அடியில் பந்தை உருட்டுவார் போலிருக்கிறது, ஏற்கெனவே உயரம் குறைவாக இருக்கும் அவர் பந்து வீசும் போது இன்னும் குனிந்து வீசும்போது அசிங்கமாக பந்து உருண்டது என்று கூறுவதற்கு சற்று மேலே எழும்புகிறது அவ்வளவே, எப்படி ஆட முடியும்? இது வேறு கதை.. இவரைப்போன்று பாகிஸ்தானிலோ, இலங்கையிலோ வீசினால் உடனே ஐசிசி தடை செய்து பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி விடும். 

இந்நிலையில் நேற்றைய வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

நான் பேட் செய்ய இறங்கியபோது சூழ்நிலையும் கடினமாகவே மாறியது. தலையை தொங்கப்போட்டு கடைசி வரை ஆடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. எங்களது இரண்டாவது இன்னிங்சை நினைத்தால் எனக்கு முதல் இன்னிங்சை விட பெருமையாக இருக்கிறது. விஜய் சங்கர் பிரமாதமாக ஆடினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனார். கேதார், தோனி ஆகியோரை அடுத்தடுத்து இழந்தோம். 

விஜய் சங்கரை உண்மையில் 46வது ஓவரில் கொண்டு வரலாம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் ரோஹித் சர்மா, தோனி ஆகியோரிடம் ஆலோசித்த போது இருவரும் பும்ரா, ஷமியே வீசட்டும் நமக்கு இன்னும் ஓரிரு விக்கெட்டுகள் விழுந்தால் நாம் டாப்பில் இருப்போம்  என்றனர் அதுதான் மிகச்சரியாக நடந்தது. விஜய் சங்கர் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசி எளிதாக வைத்துக் கொண்டார். அதுதான் வேலை செய்தது. 

இது போன்ற போட்டிகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன.  ரோஹித்துடன் பேசுவதும் கைகொடுக்கிறது, தோனி நீண்டகாலமாக இந்தப் பணியைச் செய்து வருகிறார். பவுலரிடமும் பேச வேண்டியுள்ளது. பும்ரா உண்மையில் ஒரு சாம்பியன், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆட்டத்தின் போக்கை மாற்றினார். சிலசமயங்களில் அசிங்கமாக ஆடுவது போல் இருக்க வேண்டும் அங்கிருந்து வெற்றி பெற வேண்டும் உலகக்கோப்பையிலும் குறைந்த ஸ்கோர் போட்டிகள் இருக்கும். இந்த வகையான பிட்ச் கேதார் ஜாதவ்வுக்கென்றே தயாரிக்கப்பட்டது போன்றது. அவரும் கடைசி ஓவரை வீசுவதில் ஆர்வமாக இருந்தார். 

40வது ஒருநாள் சதம் நல்லுணர்வைத் தருகிறது, ஆனால் இது வெறும் நம்பர்தான். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றது அதைவிட முக்கியம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close