[X] Close

திண்டுக்கல் கிடைக்காததால் வருத்தமில்லை: அமைச்சர் சி.சீனிவாசன் பேச்சு


  • kamadenu
  • Posted: 21 Mar, 2019 16:26 pm
  • அ+ அ-

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையி லான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத் தில் இன்று நடைபெறுகிறது.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி 20 தொடரை ஆஸ்தி ரேலிய அணி 2-0 என கைப்பற்றி சாதனை படைத் தது. இதைத் தொடர்ந்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக் கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் 237 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி ஒரு கட்டத்தில் 99 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த போதிலும் தோனி, கேதார் ஜாதவ் கூட்டணி சிறப்பாக பேட் செய்து வெற்றியை வசப்படுத்தியது.

இந்திய அணி 1-0 தொடரில் முன்னிலை வகிக் கும் நிலையில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதா னத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இன் றைய ஆட்டத்தையும் சேர்த்து இந்திய அணிக்கு இன்னும் 4 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களே உள்ளன.

இதனால் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்கு இந்த ஆட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. தொடக்க வீரரான ஷிகர் தவண், ஹைதராபாத் ஆட்டத் தில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

எனினும் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படக்கூடும். இதனால் கே.எல்.ராகுல் இடம் பெறுவது கடினம்தான். துணைக் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஆட்டத்தில் மைதானத்தின் தன்மைக்கேற்ப விளையாடிய தால் பெரிய அளவில் ரன் (66 பந்துகளில் 33 ரன்கள்) சேர்க்க முடியாமல் போனது. இதே போல் விராட் கோலியும் 44 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.

இவர்கள் இருவரும் பெரிய அளவிலான இன் னிங்ஸை விளையாட முயற்சிக்கக்கூடும். 4-வது வீரராக களமிறங்கும் அம்பதி ராயுடும் (13) கடந்த ஆட்டத்தில் உயர்மட்ட செயல்திறனை வெளிப் படுத்தத் தவறினார். அணியில் அவரது இடம் தற்போதைக்கு பாதுகாப்பாக உள்ள போதிலும் சிறந்த திறனை தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

அதேவேளையில் ஆல்ரவுண்டராக ஜொலித்த கேதார் ஜாதவ், ஆட்டத்தை மீண்டும் வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனுக்கு திரும்பி வரும் தோனி ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக் கூடும். கடந்த ஆட்டத்தில் தோனி சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடியதுடன், கேதார் ஜாதவை சிறப்பாக வழிநடத்தவும் செய்தார். இந்த கூட்டணி 141 ரன்கள் சேர்த்து வெற்றியில் பிரதான பங்கு வகித்திருந்தது.

உலகக் கோப்பை தொடர் நெருங்கும் சூழ்நிலையில் நடுவரிசை வீரர்களிடம் இருந்து இதுபோன்ற வகையிலான செயல்திறன் வெளி வந்துள்ளது அணியின் உத்வேகத்தை அதி கரிக்க வழிகோலும். அதேவேளையில் ஆல் ரவுண்டராக அணியில் இடம் பிடித்துள்ள விஜய் சங்கரின் பந்து வீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது சற்று பின்னடைவாக உள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் விஜய் சங் கருக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது யுவேந்திர சாஹல் இடம் பெறக்கூடும். யுவேந்திர சாஹல் இடம் பெறும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜாவை பேட்டிங்கில் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் அணி நிர்வாகம் கவனம் செலுத்தக்கூடும்.

கடந்த ஆட்டத்தில் ஜடேஜா, ஆஸ்திரேலிய அணியின் ரன்குவிப்பை நடு ஓவர்களில் கட்டுப் படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். 10 ஓவர்களை வீசிய அவர், விக்கெட் வீழ்த்தாத போதிலும் வெறும் 33 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சில் மொகமது ஷமி சிறந்த பார்மில் இருப்பதும் அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

ஹைதராபாத் ஆட்டத்தில் முக்கியமான கட் டங்களில் அவர், விக்கெட்கள் வீழ்த்தி திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அந்த ஆட்டத்தில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பும்ரா 2 விக்கெட்களை கைப்பற்றிய போதிலும் 60 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். ஓவருக்கு சராசரியாக 6 ரன்களை, அவர் விட்டுக்கொடுத்தது அரிதான நிகழ்வுதான்.

சமீபத்தில் பும்ரா, நிர்ணயித்த தரநிலை களுக்கு இந்தப் பந்து வீச்சு உதாரணமாக இருக்க முடியாது. இதனால் மீண்டும் உயர் மட்ட செயல் திறனுக்கு திரும்புவதில் அவர், தீவிர முனைப்பு காட்டக்கூடும். டி 20 தொடரில் சிறப் பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டியில் உத்வேகமின்றி விளையாடி வரு கிறது. அந்த அணியின் பலங்களில் ஒன்று தொடக்க ஓவர்களில் அதிரடியாக ரன் குவிப்பது.

கேப்டன் ஆரோன் பின்ச் பார்மில் இல்லாமல் இருப்பது அணியை மேலும் பலவீனமாக்கி உள்ளது. டி 20 தொடரில் முறையே 0 மற்றும் 8 ரன்கள் சேர்த்த ஆரோன் பின்ச், ஹைதராபாத் ஆட்டத்தில் ரன் கணக்கை தொடங்கும் முன் னரே விக்கெட்டை பறிகொடுத்தார். அனேகமாக இன்றைய ஆட்டத்தில் அவர், நடு வரிசையில் களமிறங்குவது குறித்து ஆலோசிக்கக்கூடும்.

மேலும் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக அலெக்ஸ் காரே அல்லது பீட்டர் ஹேண்ட்ஸ் கம்ப் ஆகியோர் நீக்கப்பட்டு ஷான் மார்ஷுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கருதப்படு கிறது. ஆல்ரவுண்டர்களான மார்கஸ் ஸ்டாயி னிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும். மேலும் பந்து வீச்சை பலப்படுத்தும் வகையில் ஆன்ட்ரூ டை விளையாடும் லெவனில் சேர்க்கப்படக் கூடும்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (இந்தியா), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி.

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), டி’ஆர்சி ஷார்ட், ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் காரே, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா, நேதன் லயன், ஜேசன் பெஹ்ரன் டார்ப், ஹை ரிச்சர்ட்சன், பாட் கம்மின்ஸ், ஆன்ட்ரூ டை, நேதன் கவுல்டர் நைல்.

நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close