[X] Close

டி 20-ல் இந்திய மகளிரணி தோல்வி


indan-team

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 05 Mar, 2019 06:16 am
  • அ+ அ-

இங்கிலாந்து மகளிரணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 41 ரன்கள் வித்தியா சத்தில் தோல்வியடைந்தது.

குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிரணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. டாமி பியூமோண்ட் 57 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 20 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 40 ரன்களும், வயாட் 34 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

161 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிரணி தொடக் கத்திலேயே ஆட்டம் கண்டது. ஹர்லின் தியோர் 8, கேப்டன் ஸ்மிருதி மந்தனா 2, ஜெமிமா ரோட் ரிக்ஸ் 2 ரன்களில் வெளியேறினர். 3.3 ஓவர்களில் 23 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்த இந்திய மகளிரணி அதன் பின்னர் மீள முடியாமல் போனது.

மிதாலி ராஜ் 7, வேதா கிருஷ்ணமூர்த்தி 15, அருந்ததி ரெட்டி 18 ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிரணியால் 6 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. தீப்தி சர்மா 22, ஷிகா பாண்டே 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து மகளிரணி தரப்பில் லின்சே ஸ்மித், கேத்ரின் ஆகி யோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிரணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close