[X] Close

ரிஸ்ட் ஸ்பின்னர்களால் அஸ்வின் நீக்கப்படுகிறாரா? - குல்தீப் யாதவ் விளக்கம்


kuldeep-yadav

  • kamadenu
  • Posted: 05 Mar, 2019 06:15 am
  • அ+ அ-

அஸ்வின், ஜடேஜா ஆகியோரை நாங்கள் அணியிலிருந்து நீக்க வில்லை, எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாங்கள் பயன்படுத் திக் கொள்கிறோம் என இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் குறுகிய வடிவிலான போட்டிகளில் தற்போது பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக யுவேந்திர சாஹ லும், குல்தீப் யாதவும் வலம் வருகின்றனர். ரிஸ்ட் ஸ்பின்னர் களான இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக வும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்திய அணி நிர் வாகம் ரிஸ்ட்ஸ்பின் மீது முழு நம்பிக்கையை கொண்டுள்ளது.

இதனால் விரல்களை பயன் படுத்தி பந்து வீசும் அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட சுழற்பந்து வீச் சாளர்களுக்கு ஒருநாள் போட்டிக் கான இந்திய அணியில் இடம் கிடைப்பது என்பது அரிதாகிவிட் டது. தற்போது ஆஸ்திரேலியா வுக்கு எதிரான தொடரில் கூட கடைசி கட்டத்தில் காயம் காரண மாக ஹர்திக் பாண்டியா விலகி யதால்தான் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டிக்காக நேற்று நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த குல்தீப் யாதவ், இந்த விவகாரம் தொடர்பாக கூறியதாவது:

அஸ்வின், ஜடேஜா என யாரையும் நாங்கள் வெளியேற் றவில்லை. இது எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள்தான். அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இந்திய அணிக் காக அஸ்வின், ஜடேஜா எப் போதுமே சிறப்பாக செயல்பட்டு வருபவர்கள்தான்.

பாடம் கற்றுள்ளோம்

டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் இருவரும் தற்போதும் விளையாடி வருகின்றனர். நாங்கள் அவர்களிடம் இருந்து ஏராளமாக கற்றுள்ளோம். அஸ் வினும், ஜடேஜாவும் அதிக அனு பவம் கொண்டவர்கள். நான் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற தருணங் களில் அவர்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன்.

நானும், யுவேந்திர சாஹ லும் எப்போதெல்லாம் விளையாடு வதற்கான வாய்ப்பை பெறுகி றோமோ, அந்த சமயங்களில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவுகிறோம். இது மகிழ்ச்சியாக உள்ளது.

உண்மையை சொல்ல வேண்டு மானால் நான், யுவேந்திர சாஹல், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறோம். இத னால் அதிகம் கவலைப்பட வேண்டி யதில்லை. எந்த பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் பந்து வீசும் போது நெருக்கடியை உணர்ந்ததில்லை. சில வீரர்கள் எனக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறார்கள். அவர்கள் அதிரடியாக விளையாடி னாலும் அதைக்கண்டு நான் பயந்ததில்லை.

ஆஸ்திரேலிய வீரர்களில் ஷான் மார்ஷ், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர். ஆஸ்திரேலிய மண்ணில் எனக்கு எதிராக அவர், சிறப்பாக விளை யாடினார். இதன் காரணமாக அணி நிர்வாகம், சில ஆட்டங்களில் எனக்கு ஓய்வு அளித்தது. அதன் பிறகு மார்ஷ் பேட்டிங் குறித்து ஆய்வு செய்தேன். இதில் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக அவர், முன்னங்காலை நகர்த்தி விளை யாடுவதை பார்த்தேன். அதற் கான பலன் அவருக்கு கிடைத் துள்ளது.

ஆனால் அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாடும் பட்சத்தில், அவருக்கு எதிராக நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை பார்க்க வேண்டும். இது முக்கியமானது.

இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close