[X] Close

கேப்டனையே ஸ்லெட்ஜிங் செய்வாயா? - ஐபிஎல் விளம்பர வீடியோவில் பும்ரா- கோலி ருசிகரம்


virat-kohli-bumrah-ipl-2019-cricket-promotional-video

  • முத்துக்குமார்
  • Posted: 01 Mar, 2019 21:14 pm
  • அ+ அ-

ஐபிஎல் 2019-ல் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு சவால் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் போட்டி நடக்கும் போது பும்ராவின் யார்க்கர்கள், மிகப்பெரிய இன்ஸ்விங்கர்களை, வேகத்தை கோலி எப்படி ஆடுவார் என்ற சுவாரசியமே. 

இந்நிலையில் ஐபிஎல் விளம்பர வீடியோ ஒன்றில் உலகின் சிறந்த பவுலரா என்று கேட்க அதற்கு பும்ரா இல்லை...  ஏனெனில் கோலிக்கு எதிராக பெரிய வெற்றியடைந்துவிடவில்லை, அவருடன் இந்த ஐபிஎல்-ல் மோதியாக வேண்டும் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவர், சீகு இந்த முறை நீங்கள் என் அணியில் இல்லை..

என்று கூற, அதே வீடியோவில்,  “சீகு பையா”? கேப்டனை ஸ்லெட்ஜ் செய்வாயா,  எப்படி ஸ்லெட்ஜ் செய்வது என்பதையும் நீ இப்போது கற்றுக் கொண்டு விட்டாய் ஆனால் உன் ‘சீகுபையா’விடமிருந்து சாதகமாக எதையும் எதிர்பார்த்து விட வேண்டாம்” என்று விராட் கோலி பதிலளிக்குமாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 23 ம் தேதி ஐபிஎல் தொடங்குகிறது. முதல் போட்டியில் தோனியின் சிஎஸ்கேயை எதிர்கொள்ளும் ராயல் சாலஞ்சர்ஸ் அணி மார்ச் 28ம் தேதி ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. 

இந்தப்போட்டியின் முக்கிய அம்சமாக பும்ராவை கோலி எப்படி ஆடுவார் என்ற ஆர்வத்தை இந்த விளம்பரம் மூலம் ஐபிஎல் தூண்டியுள்ளது. 

தனது அறிமுக சீசனில் பும்ரா, கோலியை எல்.பி.செய்தார். ஆனால் அந்த ஒருமுறையோடு சரி, அதன் பிறகு 2வது முறை கோலியை பும்ரா இன்னும் வீழ்த்தவில்லை. மாறாக விராட் கோலி பும்ராவுக்கு எதிராக 66 பந்துகளில் 99 ரன்களை எடுத்துள்ளார், இன்னும் ஒரு ரன் எடுத்தால் பும்ராவுக்கு எதிராக சதம் எடுப்பார் விராட் கோலி. 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close