[X] Close

உருவாகிட்டார் பாருங்க: ரோஹித் சர்மாவை கிண்டல் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி


mumbai-indians-troll-rohit-sharma-say-they-found-batsman-who-bettered-his-264

  • போத்திராஜ்
  • Posted: 01 Mar, 2019 16:24 pm
  • அ+ அ-

மும்பை,

ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி ரன்குவிப்பு சாதனையை கிண்டல் செய்து, ஐபிஎல் போட்டியில் அவர் இடம் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளது.

சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டை சதங்கள் அடித்த பெரும் இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்கே சாரும். ஒருநாள் போட்டியில் அவரின் அதிகபட்சம் 264 ரன்களாகும். கடந்த 2014-ம் ஆண்டு நவம்பரில் இலங்கைக்கு எதிராக 264 ரன்களை ரோஹித் சர்மா அடித்தார்.

இந்நிலையில் மும்பையில் பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் அபிநவ் சிங் என்ற மாணவர் ரோஹித் சர்மாவின 264 ரன்கள் சாதனையை அபிநவ் 265 ரன்கள் சேர்த்து  முறியடித்துள்ளார். இதில் ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் அணிக்காக விளையாடிய அபிநவ் சிங் முதல் நாளிலேயே 265 ரன்கள் சேர்த்து அசத்தினார். 33 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் விளாசினார் ரோஹித் சர்மா. இந்த ஆட்டத்தில் இலங்கையை 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

 

அபிநவ் சிங்கின் ரன்களைக் குறிப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா கிண்டல் செய்து ட்வீட் செய்தது. அதில், " ரோஹித் சர்மா, உங்களின் 264 ரன்களைக் காட்டிலும் அதிகமாக ஒருவர் அடித்துவிட்டார். மும்பை பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் அணி வீரர் அபிநவ் சிங் 265 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்துவிட்டார் " எனத் தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close