[X] Close

டேவிட் வார்னரை எதேச்சையாகச் சந்தித்த மோர்னி மோர்கெல்: பந்து வீசி நட்பைப் பகிர்ந்து கொண்டது பற்றி நெகிழ்ச்சி


david-warner

மோர்னி மோர்கெல்-வார்னர். | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 10:30 am
  • அ+ அ-

பால்டேம்பரிங் சர்ச்சையில் சிக்கி 12 மாதகால தடையில் இருக்கும் டேவிட் வார்னரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளருமான மோர்னி மோர்கெலும் எதேச்சையாகச் சந்தித்ததை மோர்னி மோர்கெல் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

விளையாடும் போது இருவரும் களத்தில் எதிரிகள் போல்தான், ஆனால் களத்துக்கு வெளியே நட்பு என்பதுதான் கிரிக்கெட்டின் விளையாட்டின் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களாகும்.

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பேங்கிராப்ட் தடை செய்யப்போட்டிதான் மோர்னி மோர்கெலின் சர்வதேச கிரிக்கெட் பிரியாவிடை போட்டியாகும். பால்டேம்பரிங் நாடகங்களுக்கு இடையே 9 விக்கெட்டுகளை அந்த டெஸ்ட்டில் கைப்பற்றிய மோர்னி மோர்கெல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் வியாழக்கிழமையான இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சியில் டேவிட் வார்னரை எதேச்சையாக மோர்னி மோர்கெல் சந்திக்க நேரிட்டது.

ஆஸி.யைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரசண்டர் ராஸ் கெல்லியைத்தான் மோர்னி மோர்கெல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டேவிட் வார்னர் பேட் செய்ய சில பந்துகளை மோர்னி மோர்கெல் அவருக்கு வீசினார், அந்தப் பந்துகள் மிகப்பிரமாதமானதாக அமைந்ததாக ஆஸி. ஊடகம் ஒன்றின் கிரிக்கெட் பக்கம் கூறுகிறது.  சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு வீசினாலும் அவர் பவுலிங்கில் மாற்றம் தெரியவில்லை என்கிறது ஆஸி. ஊடகம்.

ஆஸ்திரேலியாவில் குடியுரிமை கேட்டு அங்கே பிக் பாஷ் ஆட மோர்னி மோர்கெல் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் மோர்னி மோர்கெல் கூறியதாவது:

உறுதியாக வார்னர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் அவருக்கு பந்து வீசும்போது நாம் எப்பவும் நெருக்கடியில்தான் இருப்போம், ஏனெனில் இவர்களைப் போன்ற வீரர்களெல்லாம் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை வெகுவிரைவில் பறித்துச் செல்லும் திறமை படைத்தவர்கள்.

அவர் விரைவில் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்புவதை விரும்புகிறேன்.

தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு இப்போதுதான் வார்னரை சந்திக்கிறேன், கிரிக்கெட்டுக்கு அவர் திரும்ப வேண்டும் என்ற என் எண்ணம் அவரைப்பார்த்தவுடன் அதிகமானது. ஸ்டீவ் ஸ்மித், இவர் மீண்டும் ஆடுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பிரமாதமான ஒரு விஷயம்.

இருவரும் மீண்டும் வந்து உலகக்கோப்பையில் ஆடுவதை பார்க்க விரும்புகிறேன். இருவரும் திரும்புவது கிரிக்கெட் ஆட்டத்துக்கு நல்லது.

என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close