[X] Close

கால் இறுதியில் சவுரவ் கோஷல்


gaurav-goshal-is-semi-finals

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 10:49 am
  • அ+ அ-

பிஎஸ்ஏ உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சவுரவ் கோஷல் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சிகாகோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 11-ம் நிலை வீரரான இந்தியாவின் சவுரவ் கோஷல் வேல்ஸ் வீரர் ஜோயல் மகினை 11-13, 11-7, 11-7, 13-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் சவுரவ் கோஷல் கால் இறுதிக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். கடைசியாக அவர் 2013-ம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் கால் இறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். இம்முறை கால் இறுதியில் 3-ம் நிலை வீரரான சைமன் ராஸ்னருடன் மோதுகிறார் சவுரவ் கோஷல்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close