[X] Close

டி 20-ல் தமிழகம் தோல்வி


t-20-tamilnadu-team-looses

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 10:44 am
  • அ+ அ-

சையது முஸ்டாக் அலி டி 20 கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹிமாச்சல் பிரதேச அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூரத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முரளி விஜய் 58 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் சேர்த்தார். சதுர்வேத் 19, அஸ்வின் 14, பாபா இந்திரஜித் 12 ரன்கள் சேர்த்தனர்.

139 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹிமாச்சல் பிரதேச அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. பிரசாந்த் சோப்ரா 53 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார். ஏகந்த் சென் 35, ரிஷி தவண் 22 ரன்கள் சேர்த்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close