[X] Close

3-வது முறையாக டி20 தொடரில் “வொயிட்வாஷை” சந்தித்த இந்திய அணி: சில சுவாரஸ்ய தகவல்கள்


the-maxwell-show-leaves-india-stunned-as-australia-sweeps-series

  • போத்திராஜ்
  • Posted: 28 Feb, 2019 10:22 am
  • அ+ அ-

பெங்களூரு,

பெங்களூரில் நேற்று நடந்த 2-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் மேக்ஸ்வெல் அடித்த சதம் சேஸிங்கில் 4-வது தனிமனித அதிகபட்ச ஸ்கோர் மற்றும் ஒரு தொடரில் தனி ஒரு வீரரின் ஒட்டுமொத்த அதிகபட்சமாக அமைந்தது. அது குறித்த சில சுவாரஸ்ய தகவல்களைக் காணலாம்.

  • இந்தியாவுக்கு எதிராக சேஸிங்கில் நேற்று பெங்களூரில் மேக்ஸ்வெல் அடித்த 113 ரன்கள் என்பது தனி ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கிங்ஸ்டனில் மே.இ.தீவுகள் வீரர் எவின் லூவிஸ் 125 ரன்கள் அடித்ததே  அதிகபட்சமாகும். மேலும், 2016-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக சேஸிங்கில் கெயில் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • டி20 போட்டியில் சேஸிங்கின் போது மேக்ஸ்வெல் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். இதற்குமுன் சேஸிங்கில் எந்த ஆஸ்திரேலிய வீரரும் 2 சதங்களை அடித்தது இல்லை. மேக்ஸ்வெல் அந்த வகையில் முதலிடத்தில் உள்ளார். டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் முதல் 8 இடங்களில் 4 இடங்களில் மேக்ஸ்வெல் உள்ளார்.
  • சேஸிங்கின்போது, 2 சதங்கள் அடித்த இந்திய வீரர் கே.எல்.ராகுல். டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல், கோலின் முன்ரோ ஆகியோர் அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்துள்ளனர். ரோஹித் சர்மா 4 சதங்கள் அடித்துள்ளார்.
  • டி20 தொடரில் அனைத்து போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இந்திய அணி இழப்பது இது 3-வது முறையாகும். அதிலும் 2 அல்லது 2-க்கு அதிகமான போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைவதும் இது மூன்றாவது முறை.

  • இதற்கு முன் நியூசிலாந்திடம் 2008-09-ம் ஆண்டிலும், 2015-16-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும் இதுபோல் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைந்து இந்திய அணி தொடரை இழந்தது.
  • கடந்த 2017-நவம்பர் 1-ம் தேதியிலிருந்து தொடர்ந்து 6 டி20 தொடர்களில் இந்திய அணி கோலி தலைமையில் கோப்பையை வென்று வந்தது. ஆனால், அதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.(2017 நியூசி, 2017டிச இலங்கை, 2018பிப் தெ.ஆப்பிரிக்கா, 2018ஜூன் அயர்லாந்து, 2018ஜுலை இங்கிலாந்து, 2018நவம் மே.இ.தீவுகள், 2018நவம்.ஆஸி(டிரா))
  • இந்த தொடரில் மேக்ஸ்வெல் ஒட்டுமொத்தமாக 169 ரன்கள் சேர்த்துள்ளார். இது இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் ஒரு வீரர் சேர்த்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன் 2015-16ம் ஆண்டில் ஆஸி. வீரர் ஷேன் வாட்ஸன் 151 ரன்களை 3 போட்டிகளில் சேர்த்து குவித்திருந்தார்.
  • மிகப்பெரிய இலக்கை ஆஸ்திரேலிய அணி டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிராக 2-வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. ஆனால், இந்தயாவுக்கு எதிராக அதிகபட்ச சேஸிங் சாதனையை தென் ஆப்பிரிக்கா வைத்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் தர்மசலாவில் 200 ரன்களை இந்தியாவுக்கு எதிராக வெற்றிகரமாக சேஸிங் செய்தது. ஆஸி. அணியைப் பொருத்தவரை இது 4-வது வெற்றிகரமான சேஸிங்
  • டி20 போட்டிகளில் இதுவரை மேக்ஸ்வெல் 2-வது இன்னிங்ஸ்களில் 1050 ரன்கள் குவித்து கோலிக்கு(1231) அடுத்த இடத்தில் உள்ளார்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close