[X] Close
 

முதுகு வலியிலும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி


my-arms-can-do-the-job-says-dhoni

  • இந்து குணசேகர்
  • Posted: 16 Apr, 2018 14:44 pm
  • அ+ அ-

பஞ்சாப் உடனான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

எனினும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பேட்டிங்கில் நிகழ்த்திய அதிரடியால் அவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

 நேற்றைய ஆட்டத்தில், 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197ரன்கள் எடுத்தது. 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சென்னை அணி, மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. எனினும் அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் கடைசி ஓவர் போட்டி நகர்ந்த போதிலும் பஞ்சாப் அணியின் சிறப்பான ஆட்டதால் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும், 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் அதிரடியான ஆட்டம் வெளிப்படுத்திய தோனிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

பஞ்சாப் உடனான ஆட்டத்தின்போது தோனியின் முதுகில் காயம் ஏற்பட்டது. எனினும் காயத்தை பொருட்படுத்தாமல் ஆடிய தோனி இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

காயம் குறித்து தோனி கூறும்போது, "எனது முதுகில் கடுமையாக வலி இருந்தது.  எனினும் அதனை எதிர்கொள்ள கடவுள் எனக்கு சக்தி கொடுத்திருந்தார். நான் எனது முதுகை பயன்படுத்தாமல் கைகளையே பயன்படுத்தினேன்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close