[X] Close

தொடரை வென்றது இந்திய மகளிரணி


indian-womens-cricket

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 10:46 am
  • அ+ அ-

இங்கிலாந்து மகளிரணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை கைப்பற்றியது.

ஐசிசி மகளிரணி சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு கட்டமாக இங்கிலாந்து மகளிரணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிரணி 43.3 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக நடாலி ஷிவர் 85, வின்பீல்டு 28, பிமவுண்ட் 20 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர். 162 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிரணி 41.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 74 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 69 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், பூனம் ராவத் 32 ரன்களும் சேர்த்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிரணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய மகளிரணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி ஆட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close