[X] Close

புதிய வரலாறு: டி20 போட்டியில் சாதனை படைத்த  சுரேஷ் ரெய்னா


suresh-raina-1st-india-batsman-to-score-8000-runs-in-t20-cricket

  • போத்திராஜ்
  • Posted: 25 Feb, 2019 17:02 pm
  • அ+ அ-

 

டி20 போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா பெற்றார்.

சயத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் உத்தரப்பிரதேசம், புதுச்சேரி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா ஆடியபோது இந்த சாதனையைச் செய்தார்.

டெல்லியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தரப்பிரதேச அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து. 175 சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் ரெய்னா 11 ரன்கள் சேர்த்தால் டி20 போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார் என்ற நிலையில்,12 ரன்கள் சேர்த்த நிலையில், தாமரைக்கண்ணன் பந்துவீச்சில் ரெய்னா ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் டி20 போட்டிகளில் 300 டி20 போட்டிகளில் விளையாடி 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை ரெய்னா பெற்றார். இதற்கு முன் எந்த இந்திய வீரரும் இந்த சாதனையை எட்டவில்லை.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில், மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 369 போட்டிகளில் 12, ஆயிரத்து 298 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.

2-வது இடத்தில் நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கலம் 370 போட்டிகளில் 9,922 ரன்கள் சேர்த்துள்ளார். 3-வது இடத்தில் மே.இ.தீவுகள் வீரர் கிரன் பொலார்ட் 451 போட்டிகளில்8,838 ரன்களுடன் உள்ளார்.

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 340 ஆட்டங்களில் 8,603 ரன்களுடன் 4-வது இடத்திலும், 5-வது இடத்தில் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் 259 போட்டிகளில் 8 ஆயிரத்து 111 ரன்களுடனும், ரெய்னா 6-வது இடத்திலும் உள்ளனர்.

விராட் கோலி 251 போட்டிகளில் 7,833 ரன்களும், ரோஹித் சர்மா 299 போட்டிகளில் 7 ஆயிரத்து 795 ரன்களும் சேர்த்துள்ளனர்.

ரெய்னா 300-வது டி20 போட்டியில் இன்று விளையாடியுள்ளார். 300-வது டி20 போட்டிகளில் விளையாடிய 2-வது இந்திய வீரர் எனும் பெருமையையும் ரெய்னா பெற்றார். இதற்கு முன் தோனி மட்டுமே 300 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் சிக்ஸர் அடித்தவகையில் ரெய்னா இதுவரை டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை ரோஹித் சர்மாவுக்கு பின் ரெய்னா அடைந்துள்ளார். அதிகபட்சமாக டி20 போட்டிகளில் கெயில் 905 சிக்ஸர்களும், அதைத் தொடர்ந்து பொலார்ட் 572 சிக்ஸர்களும், மெக்கலம் 485 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close