[X] Close

ஷ்ரேயஸ் அய்யர் 55 பந்துகளில், மணீஷ் பாண்டே 43 பந்துகளில் இஷான் கிஷன் 54 பந்துகளில் சதங்கள்


shreyas-iyer-manish-pandey-ishan-kishan-centuries-syed-mushtaq-ali-t20-series-cricket

  • முத்துக்குமார்
  • Posted: 25 Feb, 2019 16:54 pm
  • அ+ அ-

சையத் முஷ்டாக் அலி டிராபி உள்நாட்டு டி20 கிரிக்கெட்டில் பயங்கரமான பார்மில் ஆடிக் கொண்டிருக்கிறார் ஷ்ரேயஸ் அய்யர். தொடர்ந்து இந்திய அணியின் கதவுகளை தட்டிக் கொண்டேயிருக்கிறார், ஆனால் அங்கு ‘லாபி’ கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் போன்றோருக்கே அதிகம் உள்ளது.

இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக 55 பந்துகளில் காட்டடி சதம் கண்டார், இதில் 10 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என்று 80 ரன்களை ஓடாமலேயே விளாசியுள்ளார்.  இந்தத் தொடரில் ஷ்ரேயஸ் அய்யரின் ஸ்கோர் 147, 46, 103 நாட் அவுட் என்று அதிகபட்ச ரன்களை தொடரில் இதுவரை எடுத்துள்ளார். 

மத்தியப் பிரதேச அணி 19.3 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, துஷார் தேஷ் பாண்டே 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் ரஹானே, பிரிதிவி ஷா ஏமாற்றமளிக்க 7/2 என்ற நிலையில் இறங்கி அய்யர் ஆட்டத்தை தன் மட்டையின் வசம் கொண்டு வந்து பிரித்து  மேய்ந்தார். இதனையடுத்து 16 ஓவர்களில் 145/2 என்று மும்பை வெற்றி பெற்றது. இவருடன் சூரியகுமார் யாதவ் மீண்டும் சேர்ந்து 36 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். கூட்டணி 138 ரன்கள். 

மணீஷ் பாண்டேயின் 43 பந்து சதம்;

கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான் டி20 போட்டியில் மணீஷ் பாண்டே 43 பந்தில் சதமும் 46 பந்தில் 111 ரன்கள் என்று விளாச அருணாச்சலப் பிரதேச அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பாண்டேயின் அதிரடியினால் கர்நாடகா 226/4 என்ற ஸ்கோரை எட்ட அருணாச்சலப் பிரதேச அணி 80 ரன்களுக்குச் சுருண்டது. ஷ்ரேயஸ் கோபால் 11 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

தோனியின் ஊரிலிருந்து இஷான் கிஷன் 54 பந்து சதம்:

டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 2 சதங்களை அடிக்கும் ஒரே வீரர் என்ற சாதனையை ஜார்கண்ட் வீரர் இஷான் கிஷன் நிகழ்த்தினார். மணிபூருக்கு எதிராக ஜார்கண்ட் 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 54 பந்துகளில் சதம் கண்ட இஷான் கிஷன் 62 பந்துகலில் 113 நாட் அவுட். இதில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்கள். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close