[X] Close

தெ.ஆ. ஒருநாள் அணியிலிருந்து ஹஷிம் ஆம்லா நீக்கம்: உலகக்கோப்பையில் ஆடுவாரா?


hashim-amla-dropped-srilanka-sa-odi-series-cricket

  • முத்துக்குமார்
  • Posted: 25 Feb, 2019 15:46 pm
  • அ+ அ-

இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி தழுவி இழந்த மதிப்பை ஒருநாள் தொடரில் மீட்டெடுக்கும் முயற்சியிலும் உலகக்கோப்பைக்காக சிலபல வீரர்களை கண்டுபிடித்துக் கொள்ளவும் தென் ஆப்பிரிக்க அணி புதிய வீரர்களை அணியில் அறிவித்துள்ளது. 

முழங்கால் காயத்தினால் ஆட முடியாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதே போல் மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் ஆன்ரிச் நார்ட்யே என்ற வேகப்பந்து வீச்சாளர் அணியில் இடம்பெற்றுள்ளார், இவரை 2019 ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.4 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூத்த வீரரும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரருமான ஹஷிம் ஆம்லா இந்த ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை, அதே போல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன், வேகப்பந்து வீச்சாளர் டேன் பேட்டர்சன் ஆகியோரும் இல்லை. 

ஸ்விங் பவுலிங் ஆல்ரவுண்டர் வியான் முல்டர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். ஆண்டில் பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ் ஆகிய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். ரிஸ்ட் ஸ்பின்னர் ஷம்சி, இம்ரான் தாஹிர் அணியில் உள்ளனர்.

பேட்டிங்கில் குவிண்டன் டி காக், டுபிளெசிஸ், டேவிட் மில்லர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. 

தென் ஆப்பிரிக்கா அணி விவரம்:

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), குவிண்டன் டி காக், ரீஸா ஹென்றிக்ஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, ஆன்ரிச் நோர்ட்டியே, ஆண்டில் பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ், கேகிஸோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, டேல் ஸ்டெய்ன், வான் டெர் டியூசன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close