[X] Close

சென்னை சிட்டி அபார வெற்றி; 3-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகானை வீழ்த்தியது


chennai-city-fc

ஆட்ட நாயகன் விருது வென்ற சென்னை சிட்டி அணி வீரர் நெஸ்டர் ஜீசஸுக்கு பரிசு வழங்குகிறார் சென்னை சிட்டி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ். படம்: ஜெ.மனோகரன்

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 10:16 am
  • அ+ அ-

ஐ லீக் கால்பந்து தொடரில் மோகன் பகான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கோவை நேரு விளையாட்டரங் கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 8-வது நிமிடத்தில் சான்ட்ரோ ரோட்ரிக்ஸிடம் இருந்து பந்தை பெற்ற நெஸ்டர் கோர்டிலோ சுமார் 105 அடி தூரத்தில் இருந்து துல்லியமாக உதைக்க, பந்து கோல்கீப்பர் ஷில்டன் பாலின் தடுப்பை மீறி கோல் வலையை துளைத்தது. இதனால் சென்னை சிட்டி அணி 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த 7-வது நிமிடத்தில் நெஸ்டர் கோர்டிலோ உதவியுடன் பந்தை பெற்ற சான்ட்ரோ ரோட் ரிக்ஸ், பாக்ஸின் மையப்பகுதியில் அடித்த பந்து கோல்கம்பத்தின் இடதுபுறம் தாழ்வாகச் சென்று கோலானது. இதனால் சென்னை சிட்டி அணி 2-0 என முன்னிலை பெற்றது. 23-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணி தனது 3-வது கோலை அடித்தது.

நெஸ்டர் கோர்டிலோவிடம் இருந்து பந்தை பெற்ற பெட்ரோ ஜாவியர் மான்ஸி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து கோல் அடித்து அசத்தினார். 37-வது நிமிடத்தில் மோகன் பகான் அணி தனது முதல் கோலை அடித்தது. பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இடதுபுறம் நோக்கி இந்த கோலை வில்லியம் லால் நன்ஃபெலா அடித்தார். முதல் பாதியில் சென்னை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 46-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணி வீரர் மஷூர் ஷரீஃப் தங்கலாகத்துக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதேபோல் 77-வது நிமிடத்தில் மோகன் பகான் அணி வீரர் ஷில்டன் பாலுக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. கடைசி வரை போராடியும் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் சென்னை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

12-வது வெற்றி

சென்னை சிட்டி அணிக்கு இது 12-வது வெற்றியாக அமைந்தது. இதுவரை 18 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சிட்டி அணி 4, டிரா, 2 தோல்விகளுடன் 40 புள்ளிகளை குவித்து பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close