[X] Close

தோனியைப் பார்த்து வீறிட்டு அழுத குழந்தை: வைரலாகும் வீடியோ


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 21 Feb, 2019 17:13 pm
  • அ+ அ-

'மிஸ்டர் கூல்' தோனிக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் அதிகம். அவரின் பார்வை படாதா என்று ஏங்கி நிற்கும் ரசிகர்கள் நிறையப் பேர், மைதானத்துக்குள் அத்துமீறிக் குதித்து அவர் காலில் விழும் பக்தாஸ்களும் உண்டு.

 

ஆனால் முதல்முறையாக குழந்தை ஒன்று தோனியிடம் போகாமல் அவரைப் பார்த்து அழுதுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

 

கடந்த ஆண்டில் சரியாக விளையாடவில்லை என்று கடும் விமர்சனத்துக்கு ஆளான இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்ட தோனி, ஆஸ்திரேலியத் தொடரின்போது 'மேன் ஆஃப் த சீரிஸ்' பெற்றிருந்தார்.

 

தற்போது மும்பையில் நட்புரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தோனியைப் பார்க்க, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்துப் பேசிய தோனி, சிலருடன் போட்டோக்களும் எடுத்துக்கொண்டனர்.

 

அங்கிருந்த குழந்தை ஒன்றை ஆசையுடன் தூக்கக் கைநீட்டினார். ஆனால் தோனியைப் பார்த்து பயந்த குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது. அவரின் அம்மா குழந்தையைத் தூக்க, புன்சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார் தோனி.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close