[X] Close

பாக். கேப்டன் சர்பராஸ் அகமெடை சூதாட்டத்துக்குத் தூண்டிய பயிற்சியாளருக்கு 10 ஆண்டுகள் தடை: ஐசிசி அதிரடி


pakistan-captain-sarfaraz-ahamed-pakistan-icc-anti-corruption-code-irfan-ansari

  • முத்துக்குமார்
  • Posted: 21 Feb, 2019 15:03 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கிரிக்கெட் சூதாட்டத்துக்குத் தூண்டிய ஷார்ஜாவைச் சேர்ந்த இர்ஃபான் அன்சாரி என்ற பயிற்சியாளருக்கு 10 மாதங்கள் தடை விதித்து உத்தரவிட்டது ஐசிசி. 

2017-ல் ஷார்ஜாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் ஆடிய 3வது ஒருநாள் போட்டியின் போது சர்பராஸ் அகமெடை அணுகி ஆட்டம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சூதாட்டத்தில் ஈடுபடவும் தூண்டியுள்ளார் இர்பான் அன்சாரி, இதனை உடனடியாக சர்பராஸ் அகமெட், ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுக்குத் தெரியப்படுத்தி புகார் அளித்தார். 

இதனையடுத்து விசாரணையில் இர்பான் அன்சாரி குற்றமிழைத்ததாக நிரூபணமாக அவர் எந்த விதமான கிரிக்கெட் சம்பந்தமான தொடர்புகளிலிருந்தும் 10 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டார்.

அன்சாரி கிரிக்கெட் வீரர் இல்லை என்றாலும் பாகிஸ்தன கிரிக்கெட் அணியுடன் தொடர்புடையவர் என்பதாலும் இரண்டு அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பதாலும் ஐசிசி நடத்தை விதிகள் இவர் மீது பாய்ந்துள்ளது. 

சர்பராஸ் அகமெட் இதனை உடனடியாகப் புகார் அளித்ததற்கு ஐசிசி அவரைப் பாராட்டியுள்ளது. 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close