[X] Close

உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் ரிஷப் பந்த் ஏன் தேவை?- ஆஷிஸ் நெஹ்ரா கூறும் 5 காரணங்கள்


nehra-lists-5-reasons-why-pant-should-be-in-indias-wc-squad

  • போத்திராஜ்
  • Posted: 14 Feb, 2019 16:07 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

இங்கிலாந்தில் விரைவில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பெற வேண்டிய 5 முக்கியக் காரணங்களை முன்னாள்வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

திறமையான மேட்ச் வின்னர், நல்ல தொடக்க ஆட்டக்காரர், அதிரடியாக ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல் சிக்ஸர் அடிக்கக் கூடியவர் ரிஷப் பந்த். டெல்லியில் உள்ள சோனட் கிளப்பில் பயிற்சி பெற்றதில் இருந்து ரிஷப் பந்தின் ஆட்டத் திறமையை நெஹ்ரா கவனித்து வந்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்துக்கான இடம் தேவை என்பதை நெஹ்ரா 5 முக்கிய காரணங்களை கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

1.         அணியில் பங்களிப்போர் எப்போதும் இரு பங்களிப்போர் இருந்தாலும், உலகக்கோப்பைப் போன்ற மிகப்பெரிய போட்டியில் வெற்றியைத் தீர்மானிக்கும் துருப்புச்சீட்டு வீரர்கள் தேவை. ரிஷப் பந்த் சாதாரன பங்களிப்பு வீரர் அல்ல, தரமான மேட்ச் வின்னர் என்பதால், உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

2.         இந்திய பேட்டிங் வரிசையை நீங்கள் பார்த்தால், ஷிகர் தவணுக்கு அடுத்தார்போல் இடதுகை பேட்ஸ்மேன் முதல் 7 வீரர்களில் யாரும் இல்லை. அணியில் வலது, இடது பேட்ஸ்மேன் கூட்டு இருப்பது எதிரணி வீரர்களுக்குச் சிக்கலை உண்டாக்கும். வலது, இடது பேட்ஸ்மேன் நமகுக்கும் தேவை. அதற்கு பொருத்தமானவார் ரிஷப் பந்த் இருப்பார்.

3.         ரிஷப்பந்த் அணியில் எந்த நிலையிலும் களமிறங்கி விளையாடக் கூடியவர். ஆதலால், எந்த நிலையிலும், ரிஷப் பந்தை அணி நிர்வாகம், கேப்டன் கோலி பயன்படுத்திக்கொள்ள முடியும்.

4.         சிக்ஸர்களை எளிதாக அடிக்கக் கூடியவர் ரிஷப் பந்த். அவரின் துணிச்சலான பேட்டிங், அச்சமில்லாத பேட்டிங் நெருக்கடியான நேரத்தில் அணிக்கு உதவும்.

5.         அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல், அசராமல் சிக்ஸர் அடிக்கும் திறமை பெற்றவர் ரிஷப் பந்த். உலகக் கோப்பைக்கு நிச்சயம் ரிஷப் பந்த் தேவை. இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் ரிஷப் பந்த் தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளதே சாட்சியாகும்.

இந்திய விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய 3 மேட்ச் வின்னர்கள் இருக்கின்ற போது, 4-வது மேட்ச் வின்னராக ரிஷப் பந்த் ஜொலிப்பார்.

அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர்சிறந்த வீரர்கள்தான். ஆனால், அனைவரும் ஒரே வார்ப்பாக இருக்கிறார்கள். நமக்குத் தேவை இப்போது வெற்றிக்கான துருப்புச் சீட்டு. அது ரிஷப் பந்த்.

ஒரு அணிக்கு தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகிய 3 விக்கெட் கீப்பர்கள் இருப்பது சரியாகுமா என்கிற கேள்வி புரிகிறது. ஆனால், ஏற்கனவே நான் கூறிவிட்டேன்,ரிஷப் பந்த் நல்ல தொடக்க ஆட்டக்காரர். தினேஷ் கார்த்திக் நடுவரிசையில் மட்டுமே விளையாடக்கூடிய அனுபவம் படைத்தவர். தோனி கீப்பிங் பணி செய்யும், மாற்று வீரர்களாக கார்த்திக், ரிஷப்பந்த் இருப்பதில் தவறில்லை.

அணிக்கு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் தேவை என்ற ரீதியில் இருவரையும் தேர்வு செய்யலாம். தோனி ஸ்டெம்புக்கு பின்னால் இருக்கும் வரை இவர்கள் இருவரும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இருப்பார்கள்.

இவ்வாறு நெஹ்ரா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close