[X] Close

நியூஸிலாந்துக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் கடைசி ஓவரில் ரன் ஓடாதது ஏன்?- தினேஷ் கார்த்திக் விளக்கம்


dinesh-karthik

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 10:59 am
  • அ+ அ-

நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஒரு ரன் ஓடுவதற்கு தினேஷ் கார்த்திக் மறுப்பு தெரிவித்தது பெரும் விவாதப் பொருளாக மாறியது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட அந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தது.

மறுமுனையில் கிருனல் பாண்டியா அதிரடியாக விளையாடி வந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவருக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் தானே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைக்க நினைத்ததே இந்திய அணிக்கு பாதகமாக அமைந்ததாகவும் முன்னாள் வீரர்கள் பலர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:ஹாமில்டன் போட்டியில் ஒரு ரன் ஓடுவதற்கு மறுப்பு தெரிவித்த சூழ்நிலையில் என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன். ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பவர் அழுத்தமான சூழ்நிலைகளில் பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்ள முடியும் என தனது திறமை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில் நம்முடன் களத்தில் இருக்கும் வீரர் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் முக்கியம். ஆனால் என்னால் எதிர்முனைக்கு ஓட முடியாமல் போய்விட்டது. கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறும். சில தினங்களில் பவுண்டரிகள் விளாச முடியும். சில தினங்களில் பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்படுவார்.

அழுத்தமான சூழ்நிலையில் டிம் சவுதி சில யார்க்கர்களை வீசியதை பாராட்டியாக வேண்டும். அங்கு ஒரு தவறு நடந்திருந்தாலும், நாங்கள் அவரை வீழச்செய்திருப்போம். ஆட்டத்தின் சூழ்நிலையை அணி நிர்வாகம் உணர்ந்திருந்தது. நாங்கள் இருவரும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டோம் என்பதை தெரிந்துள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் விளையாடுவதற்கு நான் பழகிஇருக்கிறேன். பயிற்சியின் மூலம் இதுபோன்ற சூழ்நிலைகளில் விளையாடி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த பணியை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஆனால் அந்த நாளில் அதை நான் செய்ய இயலாமல் போய்விட்டது. அதுதான் கிரிக்கெட் விளையாட்டு. உங்கள் மீது எவ்வளவுக்கு எவ்வளவு நம்பிக்கை வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு சீராக விளையாடி ஆட்டத்தை வெற்றியில் முடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close