மே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து

செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து, மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை 2-1 என்று இழந்ததையடுத்து ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை விடவும் பின்னடைவு கண்டது.
டாப் 3-யில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன. 3வது டெஸ்ட் போட்டியில் 122 ரன்கள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 5ம் இடம் பிடித்தார். நியூஸிலாந்தின் ஹென்றி நிகோல்ஸும் 5ம் இடத்தில் இருக்கிறார்.
பேட்டிங்கில் விராட் கோலி அசைக்க முடியாமல் 1ம் இடத்தில் தொடர்கிறார்.
மே.இ.தீவுகள் அணியில் கிமார் ரோச் ஐசிசி பவுலிங் தரநிலையில் 11ம் இடத்துக்குத் தாவியுள்ளார். இந்தத் தொடரில் 18 விக்கெட்டுகளை கைப்பற்றினார் கிமார் ரோச், இதனால் 11 இடங்கள் முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜேசன் ஹோல்டர் முதலிடம் வகிக்க பென் ஸ்டோக்ஸ் ஒரு இடம் முன்னேறி 4ம் இடத்தில் இருக்கிறார்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- ’ஒரு கைதியின் டைரி’ படத்துக்கு அவரே சூப்பரா சீன் சொன்னாரு; அப்புறம் அதுவேணாம்னு அவரே சொல்லிட்டாரு! – பாக்யராஜ் குறித்து சித்ரா லட்சுமணன் பெருமிதம்
- கடன் கேட்க தவித்த பாலுமகேந்திரா; கேட்காமலேயே உணர்ந்து உதவிய கமல்!
- சொக்க வைத்த சிலோன் ரேடியோ; உங்கள் நண்பன்… கே.எஸ்.ராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, ராஜேஸ்வரி சண்முகம், பிஹெச்.அப்துல்ஹமீது…
- இறவாக் கலைஞன் பாலுமகேந்திரா