[X] Close

இதற்கு அவுட் தரவில்லை என்றால் நான் கரீபியனுக்கே சென்று விடுகிறேன்: வர்ணனையில் ஹோல்டிங் ஆவேசம்


south-africa-srilanka-test-series-2019-hashim-amla-catch-michael-holding-cricket

  • முத்துக்குமார்
  • Posted: 13 Feb, 2019 17:17 pm
  • அ+ அ-

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டர்பனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் 2 மணி நேர ஆட்டத்திலேயே சர்ச்சைகள் மூண்டுள்ளன.

முதலில் ஹஷின் ஆம்லா எல்.பி. நாட் அவுட் தீர்ப்பின் மீதான டி.ஆர்.எஸ் முறையீட்டுக்கு 15 விநாடிகள் முடிந்து விட்டது என்று நடுவர் மறுத்தது சர்ச்சையானது, அதன் பிறகு இதே ஹஷிம் ஆம்லாவுக்கு ஸ்லிப்பில் பிடித்த அபாரமான கேட்சுக்கு சாஃப்ட் சிக்னலாக களநடுவர் நாட் அவுட் என்று கூறியது.  ஏற்கெனவே இந்த சாஃப்ட் சிக்னல்கள் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் இன்றும் சாஃப்ட் சிக்னல் நாட் அவுட் பிரச்சினையானது.

எல்.பி. அப்பீலில் தப்பிய ஆம்லா நீண்ட நேரம் நீடிக்கவில்லை.  3 ரன்கள் எடுத்த நிலையில் சுரங்க லக்மல் பந்தை ஆடலாமா வேண்டாமா என்ற இரண்டு மனநிலையில் சற்றே தாமதமான முடிவினால் எட்ஜ் ஆகி குசல் மெண்டிஸ் அருமையாக அதை கேட்ச் எடுத்தார். ஆனால் இம்முறை பந்து தரையில் பட்டு வந்தது என்ற சந்தேகம் எழுந்தது, ஆம்லாவும் களத்தை விட்டு அசையவில்லை. 

கேட்ச் துல்லியமானதுதான் என்று தெரிந்தது, ஆனால் களநடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ 3வது நடுவரை அழைத்தார், ஆனால் தனக்குத் தெரியவில்லை என்று சைகை செய்வதற்குப் பதிலாக சாஃப்ட் சிக்னலாக நாட் அவுட் என்றார். ஆனால் ரீப்ளேயில் பந்து துல்லியமாக கேட்ச் ஆனது தெரிய 3வது நடுவர் கோல்ட் அவுட் என்று தீர்ப்பளித்தார். 

அப்போது வர்ணனையில் இருந்த முன்னாள் மே.இ.தீவுகள் வேகப்புயல் மைக்கேல் ஹோல்டிங், “இதனை நாட் அவுட் என்றால் நான் திரும்பவும் கரீபியனுக்கே சென்று விடுகிறேன். நடுவர்களுக்கு ஆட்டம் நன்றாகத் தொடங்கவில்லை, முதலில் 13 விநாடி ஆனதற்கு 15 விநாடி என்று டி.ஆர்.எஸ். கோரிக்கை மறுப்பு, தற்போது துல்லியமான கேட்சுக்கு சாஃப்ட் சிக்னல் நாட் அவுட்” என்று ஆவேசப்பட்டார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close