[X] Close

சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி: கேதர் ஜாதவுக்கு மாற்றாக ஒப்பந்தம் 


david-willey-csk-replacement-kedhar-jadhav-injury

டேவிட் வில்லி | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 11 Apr, 2018 15:22 pm
  • அ+ அ-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி விளையாடவுள்ளார். கேதர் ஜாதவ்வுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால், அவருக்கு பதிலாக வில்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து பிசிசிஐ அறிக்கையில், "ஐபிஎல் 2018ல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, காயமடைந்த கேதர் ஜாதவுக்கு மாற்றாக விளையாட, டேவிட் வில்லி  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் ஜாதவுக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட முடியாமல் பாதியிலேயே வெளியேறினார். ஆனால், கடைசி கட்டத்தில் அணிக்காக மீண்டும் களமிறங்கி, வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தார். காயம் தீவிரமடைந்துள்ளதால் ஜாதவ் இந்த ஐபிஎல் சீசனில் இனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


மும்பைக்கு எதிரான போட்டியில் காயத்துடன் விளையாடிய கேதர் ஜாதவ்

இங்கிலாந்தை சேர்ந்த வில்லி, இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன். 34 ஒரு நாள் போட்டிகளிலும், 20 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டு விதத்திலும் சிஎஸ்கே அணிக்கு வில்லியின் வருகை உதவியாக இருக்கும். மேலும் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசவும், மட்டையை சுழற்றவும் வில்லியால் முடியும். பிக் பேஷ் லீக் போட்டிகளில் பெர்த் அணிக்காக வில்லி களமிறங்கியுள்ளார். 

சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் பஞ்சாபை சந்திக்கிறது. 

- ஐஏஎன்எஸ்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close