[X] Close

ரிஷப் பந்த் ஓர் ‘ஆரோக்கியமான தலைவலி’- எம்.எஸ்.கே.பிரசாத்தின் முரண் புகழாரம்


world-cup-2019-rishabh-pant-rahane-vijay-shankar-team-india

  • முத்துக்குமார்
  • Posted: 11 Feb, 2019 19:13 pm
  • அ+ அ-

உலகக்கோப்பை அணித் தேர்வில் ரிஷப் பந்த், ரஹானே, விஜய் சங்கருக்கு வாய்ப்பிருப்பதாக அணித்தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ நேர்காணலில் பிரசாத் இது குறித்துக் கூறியதாவது:

‘சந்தேகத்திற்கிடமின்றி நிச்சயமாக ரிஷப் பந்த் பெயர் பரிசீலனையில் உள்ளது. அவர் ஒரு ஆரோக்கியமான தலைவலி. கிரிக்கெட் வடிவங்களினூடே கடந்த ஓராண்டுகாலம் பந்த்தின் வளர்ச்சி மிகக்கவனிக்கத்தக்கது. இப்போது அவருக்கு கொஞ்சம் முதிர்ச்சி தேவை என்று உணர்கிறோம். அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் இந்தியா ஏ-வில் அவரை தொடர்ந்து அணியில் சேர்த்துக் கொண்டு வருகிறோம். 

விஜய் சங்கர் 4வது ஆல்ரவுண்டராக 20 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம்பெறுவார், அதிலிருந்து 15-ல் இடம்பெறுவாரா என்பதைப் பார்க்க வேண்டும். 

விஜய் சங்கரைப் பொறுத்தவரை அவருக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளையும் திறம்பட பயன்படுத்திக் கொண்டார். இந்தியா ஏ தொடர்கள் மூலம் அவரை வளர்த்தெடுத்து வருகிறோம். இந்த உயர்மட்டத்துக்கான திறமைகள் அவரிடம் உள்ளன. ஆனால் அணியின் இயங்குதளத்தில் அவர் எங்கு பொருந்துவார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ரஹானேவும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் எடுத்து வருகிறார், அனுபவமிக்கவர், நிச்சயம் அவர் உலகக்கோப்பை அணியில் பரிசீலனையில் இருக்கிறார்’ இவ்வாறு கூறினார் பிரசாத்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close